"இரும்பு கோட்டை".. ஆளுநர் மாளிகைக்கு போன 500 பேர்.. ரவி நடத்திய அந்த மீட்டிங்.. நோட்டமிடும் திமுக!
சென்னை: ஆளுநர் மாளிகையில் ஆர். என் ரவி நடத்தி வரும் சமீபத்தில் மீட்டிங்குகள் சில கவனத்தை ஈர்த்து உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியின் இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆளும் திமுக அரசும் தீவிரமாக கவனித்துக்கொண்டு வருவதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி இந்து மதம் குறித்தும், சானதனம் குறித்தும் பேசி வருவதாக திமுக தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
ஆளுநரின் பேச்சு மட்டுமின்றி அவர் பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி தடுப்பு மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் ஆளுநர் - திமுக இடையே மோதல் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். முக்கியமாக இந்துத்துவா குறித்தும், சானதனம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

எம்பி வில்சன்
அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவியின் சமீபத்திய நடவடிக்கைகள் சில விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆளுநர் மாளிகை எனும் ராஜ்பவன் என்பது சாமானியர்கள் யாரும் நுழைந்து விட முடியாத எஃகு கோட்டை அது. அந்த இரும்பு கோட்டையின் மரபுகளை உடைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தினமும் ஒரு நிகழ்ச்சி என்கிற வகையில் சில சந்திப்புகளை நடத்தி வருகிறார். குறிப்பாக, ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவது போல சில சந்திப்புகளை நடத்துகிறார்.

பாஜக
அதாவது இளம் தலைமுறையினரை பாஜக பக்கம் ஈர்க்கும் வகையில் இத்தகைய சந்திப்புகள், நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில், இந்திய ஆட்சிப் பணித் தேர்வினை எழுதப்போகும் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தினார் ரவி. அந்த கலந்துரையாடலில், அவரது பள்லிப் பருவ காலம் தொடங்கி இந்திய ஆட்சிப் பணியில் அவர் எதிர்கொண்ட சவால்கள் வரை மனம் திறந்து பேசினார். மேலும், மத்திய பாஜக அரசின் சர்வதேச அரசியல், தேசிய கல்விக்கொள்கை, எதிர்கால இந்தியா உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் ரவி
பிரதமர் மோடி அரசாங்கத்தின் ஆளுமைகள் மாணவ-மாணவிகளின் மனதில் பதிய வைத்திருக்கிறார் ஆளுநர் . இந்த சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பு தான் உதயநிதி பதவியேற்புக்காக ராஜ்பவன் பரபரப்பாக இருந்தது. அப்போது, வி.வி.ஐ.பி.க்கள் சாப்பிடுவதற்காக டேபிள் அரேஞ்மெண்ட் எப்படி இருந்ததோ அதேபோல, மாணவ-மாணவிகளுக்கும் டேபிள் அரேஞ் பண்ணுங்க என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல டேபிள்கள் போடப்பட்டன. மாணவ-மாணவிகள் அதில அமர, அறுசுவை உணவுகள் அவர்களுக்கு பரிமாறப்பட்டன.

திமுக நோட்டம்
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, சென்னையில் உள்ள வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்கள், குறிப்பாக உழைப்பால் உயர்ந்த இளம் தொழிலதிபர்கள் பலரையும் அழைத்து விவாதித்தார். தொழில் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ரவி. இந்த நிலையில், கல்லூரி மாணவ-மாணவிகள், உழைக்கும் பெண்கள், சிறு தொழில் முனைவோர் என சமூகத்தின் பல்வேறு கூறுகளாக இருக்கும் அனைவரையும் ஒவ்வொரு நாளில் சந்திக்க திட்டமிடுகிறது ராஜ்பவன். ஆளுநர் ஆர். என் ரவியின் இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆளும் திமுக அரசும் தீவிரமாக உற்று கவனித்துக்கொண்டு இருக்கிறது.
-
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications