எல்லாம் உள்நோக்கம்.. திமுகவின் வழக்கறிஞர் அணிக்கு நன்றி.. ஜாமீனில் வெளியே வந்த ஆர். எஸ் பாரதி டிவிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாமீனில் வெளியே வந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விடுதலைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் இன்று அதிகாலை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என்று அவர் கூறிய பேச்சு ஒன்று சர்ச்சை ஆனது. இதுதான் கைதுக்கு காரணம். இந்த பேச்சுக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், புகார் அளித்து இருந்தார்.

ஜாமீன் விடுதலை

ஜாமீன் விடுதலை

இரண்டு மாதம் கழித்து இந்த புகார் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடந்த அவசர விசாரணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். மே 31ம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். திமுகவின் வழக்கறிஞர் அணியின் துரிதமான செயல்பாட்டால் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் கிடைத்தது .

டிவிட் செய்தார்

டிவிட் செய்தார்

இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது ஆர். எஸ் பாரதி டிவிட் செய்துள்ளார். அதில், என் மீது உள்நோக்கம் கொண்டு சித்தரிக்கப்பட்ட வழக்கில் அரசியல் காரணங்களுக்காக என்னை கைது செய்யும் முயற்சியை முறியடிக்க உதவிய தி.மு.க வழக்கறிஞர் அணிக்கும், இந்த கடினமான சூழலில் எனக்கு பக்க பலமாகவும் உற்ற தோழனாகவும் விளங்கிய திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நன்றி.

நன்றி சொன்னார்

நன்றி சொன்னார்

அதேபோல் நண்பர் டி.ஆர்.பாலு, மகளிரணி செயலாளர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், தெய்வசிகாமணி, செல்வம், சுப்பிரமணியன், தா. மோ அன்பரசன், ஜே அன்பழகன், R. T. அரசு, பிகே சேகர்பாபு, எம்எல்ஏ சேகர், அரவிந்த் ரமேஷ், இ.கருணாநிதி, ப.இரங்கநாதன், எஸ். ராஜா, காசிமுத்து, பிரசன்னா தமிழன் ஆகியோருக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரிய பட்டியல்

பெரிய பட்டியல்

தி.மு.க நிர்வாகிகள், கூட்டணி கட்சி தோழர்களுக்கும் மற்றும் என் வீட்டிலும் நீதிமன்றத்திலும், இணையத்திலும் ஆதரவு கரம் நீட்டிய என் மீது உளப்பூர்மான அன்பு கொண்ட கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஆர். எஸ் பாரதி டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+