"அவரிடம்" இருப்பது கிறிஸ்தவ பணம்.. நம்ம சரத் வேற பாவம் மாட்டிக்கிட்டார்.. ராதாரவி பொளேர்

திமுகவை சரமாரி விமர்சித்துள்ளார் ராதாரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சமஸ்கிருதம்" என்று ஸ்டாலினுக்கு சொல்லவே தெரியவில்லைன்னு சொல்றாங்க. அவருக்கு சமஸ்கிருதம் எப்படி வாயில் வரும்? "சம்சாரம்"ன்னுதானே வரும்? கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்... நம்ம சரத்குமார் வேற பாவம் அவர் கிட்ட மாட்டிகிட்டார்" என்று பாஜகவின் ராதாரவி பிரச்சாரத்தில் பேசியுள்ளார். வழக்கம்போலவே ராதாரவியின் இந்த பேச்சுக்கள், தமிழக கட்சியினரை கொந்தளிக்க வைத்து வருகிறது.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் ராதாரவி, ஸ்டாலின், கமல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேசினார். ராதாரவி பேசியதாவது:

"புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளன.. நான் இங்கு முக்கியமா பேசறதுக்கு ஏன் ஒப்புக்கிட்டேன் தெரியுமா? பாமக நம்மகூட சேர்ந்ததற்காக மட்டும்தான். இத்தனை காலம் துரோகிகளோடு சேர்ந்து நானும் எவ்வளவோ திட்டியிருக்கேன்.. அந்த பாவத்துக்கு பிராயசித்தமாகத்தான் பாஜகவில் சேர்ந்து, இப்போ பேசறேன்.

சிலைகள்

சிலைகள்

அம்பேத்கரை பத்தி எல்லோரும் பேசலாம், சொந்தம் கொண்டாடலாம்... ஆனால் தமிழகத்தில் ஒரே நாளில் அம்பேத்கரின் 7 சிலைகளை திறந்தது ராமதாஸ் மட்டும்தான்... அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த இல்லத்தை பாஜக அரசு வாங்கி, அம்பேத்கரின் நினைவு சின்னமாக மாற்றியுள்ளனர். அந்த இடத்தில், பட்டியலினத்து மாணவர்கள் எப்போ வேணும்னாலும் போய் தங்கலாம்.. இப்படிப்பட்ட வசதிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்... இன்னும் 40 வருஷத்துக்கு மத்தியில் ஆளப்போவது பாஜகதான்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அதுல கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை... அதனால, நீங்க கையேந்தும் இடம் டெல்லி என்பதை ஞாபகத்தில் வெச்சுக்கணும்.. ஆனால், இங்குள்ள பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணியை தேர்ந்தெடுத்தால் நீங்க கையேந்த தேவையில்லை. ஒருவேளை நீங்க மாற்றி வாக்களித்தால் என்ன ஆகும்?ன்னு முன்னாள் முதல்வர் நாராயணசாமிகிட்ட போய் கேளுங்க.. இவர்களை, முன்பிருந்த ஆளுநர் முட்டிபோட வைத்தார்... அதனால், நீங்க வேறு யாரையாவது கொண்டு வந்து உட்கார வைக்க நினைச்சால், மறுபடியும் உங்களை முட்டிபோட வைப்போம்.

 செத்து போயிடுச்சு

செத்து போயிடுச்சு

பாஜக வந்தாலொழிய புதுச்சேரியை யாராலுமே காப்பாத்த முடியாது. காங்கிரஸ் கட்சி செத்து போயிடுச்சு.. அதனால், இந்தியாவில் இனி காங்கிரஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஆனால், பாஜக அவ்வளவும் நல்லதை செய்திருக்கிறது.. விவசாயிகளுக்கு கடன் வசதி உட்பட, 20 கோடி பேருக்கு வீடுகள் கட்டி தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வேலையும், இந்த 2022-ல் முடிஞ்சிடும்.

 இந்துக்கள்

இந்துக்கள்

நான் பணம் வாங்கிவிட்டேன்னு எல்லோரும் சொல்லுவாங்க.. ஆமா, நான் பணம் வாங்கினேன்.. இந்துக்களிடம் இருந்துதான், பணம் வாங்கியிருக்கேன்.. கிறிஸ்தவரோ, வேறு மதத்தினரிடம் நான் பணம் வாங்கல.. பாஜகவை நான் ஏற்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், நாளை நம்ம குழந்தைகளுக்குன்னு கோயில் இருக்கணும்.. அங்க போய் அவங்க வழிபடணும்.. அதனால் உண்மையான இந்துவாக இருந்தால் பாஜகவுக்கு ஓட்டு போடுங்க.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம்


ஸ்டாலின் பேசும்போது, "நான் ரெடி நீங்க ரெடியா?"ன்னு ஏன் சொல்றார்? அவர் ரெடியாகும் போதுதான் மக்களும் ரெடியாக வேண்டுமா என்ன? சமஸ்கிருதம் என்று அவருக்கு சொல்லவே தெரியவில்லைன்னு சொல்றாங்க. அவருக்கு சமஸ்கிருதம் எப்படி வாயில் வரும்? "சம்சாரம்"ன்னுதானே வரும்?

 கருணாநிதி

கருணாநிதி

இந்தியை கற்றுக் கொள்ளக்கூடாது என்று திமுக தான் சொனன்து.. ஆனால், ஸ்டாலின் குடும்பத்தார் எல்லாருமே இன்னைக்கு இந்தி பேசுறாங்க.. தூர்தர்ஷன் என்ற பெயரை மாற்றக்கோரி கருணாநிதி தலைமையில் டிவியை உடைக்கும் போராட்டம் நடந்தபோது நானும்தான் அந்த டிவியை போட்டு உடைச்சேன்.
ஆனால், கலைஞர் உடைத்த பெட்டியில் ஒன்னுமே இல்லை... திமுகவினர் ஏமாத்துகாரர்கள்... இப்போது பல கட்சிகள் வந்துவிட்டன.

கமல்

கமல்

கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிச்சிட்டார். முத்த காட்சியை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கே உண்டு.. எத்தனையோ தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட இந்த கமல், இன்னைக்கு கோவையில் தெரு தெருவா அலைகிறார்... கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்... நம்ம சரத்குமார் வேற பாவம் அவர் கிட்ட மாட்டிகிட்டார்.

பிரெஞ்சுக்காரன்

பிரெஞ்சுக்காரன்

புதுச்சேரி எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஏன் தெரியுமா? இங்க தண்ணி அடிச்சால், அமைதியாக போவான்.. ஆடமாட்டான்... அடுத்தவன் வீட்டுக்கு போகமாட்டான்... ஏன்னா, இங்கு பிரெஞ்சுகாரன் ஒழுக்கத்தை கத்து தந்திருக்கான்.. பிரிட்டிஷ்காரன் அதை தமிழ்நாட்டில் கற்றுத்தரல... இந்த சின்ன ஊரை கூட காங்கிரஸால் காப்பாற்ற முடியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+