2018ல் விஜயகாந்த் கடைசியாக என்னை பார்த்து கேட்ட "அந்த" கேள்வி.. நொறுங்கிவிட்டேன்.. ராதாரவி கண்ணீர்
சென்னை: என் நண்பன் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிய போகிறார் என்பதை 2018 ஆம் ஆண்டிலேயே நான் கணிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது என நடிகர் ராதாரவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புரட்சிக் கலைஞர், கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் டிசம்பர் 26 ஆம் தேதி வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கடந்த மாதம் 28ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சளி இருந்த நிலையில் சளி மாதிரி எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு நிமோனியா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார்.
இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள், கேப்டனால் பயனடைந்தவர்கள், பயனடையாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதிலிருந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இதனால் தலைநகர் சென்னைக்கு மூச்சுமுட்டும் அளவுக்கு கூட்டம் இருந்தது.
இந்த நிலையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் இறுதி சடங்கு செய்ய ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது லட்சோப லட்ச மக்கள் திரண்டனர். நவீன கர்ணனுக்கு மேம்பாலங்கள், வீட்டு மாடி, அலுவலக மாடிகள், சாலைகள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் நின்று அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
விஜயகாந்தின் இறப்பால் அவருடைய நண்பர் ராதாரவி, தியாகு உள்ளிட்டோர் கண் கலங்கினர். இதுகுறித்து ராதாரவி சன் நியூஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான், விஜிம்மா (விஜயகாந்த்), எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு ஆகியோர் உயிருக்கு உயிரான நண்பர்கள். எங்களுக்கெல்லாம் விஜிம்மாதான் ஹீரோ.
கடந்த 2018ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். இதனால் எனக்கு ஓட்டு போடுமாறு கேட்பதற்காக விஜிம்மாவின் திருமண மண்டபத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்ததும் நன்றாக பேசினார். என்னிடம் அண்ணி எப்படி இருக்காங்க டா என கேட்டார்.
எல்லாம் செய்துவிட்டு திடீரென பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் இவர் யார் என என்னை பார்த்து கேட்டார். உடனே என் மனம் முடிவு செய்துவிட்டது. ஒரு நண்பரை நாம் இழக்க போகிறோம் என! உடனே விஜிம்மா நீ ஓட்டு போடலாம் வரவேண்டாம் என சொல்லிவிட்டேன். அதாவது சிங்கம் மாதிரி அவரை பார்த்துவிட்டு இந்த நிலையில் அவரை பார்க்க நான் விரும்பவில்லை.
இதையடுத்து அவர் டிசம்பர் 26ஆம் தேதி மருத்துவனையில் சேர்த்ததுமே என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். விஜிம்மா நம்மை விட்டு போக போகிறார் என! 2018இல்தான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அவருடைய மனைவியிடம் அனுமதி கேட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். அதனால் நான் ஒதுங்கிவிட்டேன்.
பொதுக் குழுவில் அவரை அழைத்து வந்து உட்கார வைத்து கஷ்டப்படுத்தியதை பார்த்ததும் எனக்கு மனம் வருந்தியது. இத்தனை ஆண்டுகளாக பார்க்காத ஏக்கத்தில் தீவுத்திடலில் என் நண்பனை பார்த்ததுமே இப்பயாவது பார்த்தோமே என இருந்தது. ஆனால் என்னை அழைத்து பேட்டி கேட்டவுடன்தான் நான் கலங்கிவிட்டேன். விஜிம்மாவை நேரில் பார்த்தால் என்னை விட்டு ஏன்டா போனே என கேட்பேன் என ராதாரவி கண்கலங்கி பேசியிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications