நடு ரோட்டில் வந்து நின்ற "மீனா".. வெலவெலத்து போன "ராதிகா".. உதயநிதி தொகுதியில் பரபரப்பு!

உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் விமர்சித்து பேசினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேனில் நின்று கொண்டு ஆவேசமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராதிகா.. அப்போதுதான் மீனா குறுக்கே வந்து, அந்த கேள்வியை கேட்டார்.. இதை கேட்டதும் ராதிகா ஒருநிமிஷம் வெலவெலத்து போய்விட்டார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் மநீம கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது இத்ரீஸை ஆதரித்து நடிகை ராதிகா பிரச்சாரம் செய்தார்..

இதே தொகுதியில்தான் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். எனவே, பிரச்சார வேனில் நின்று கொண்டு உதயநிதியை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார் ராதிகா.

 உதயநிதி

உதயநிதி

"உதயநிதியின் மூஞ்சியை மக்களுக்கு தெரியணும், பிரபலமாக்கணும்னு நடிகர் ஆக்கிட்டு அப்பறம் அரசியலுக்கு கொண்டு வந்தாங்க.. இது எனக்கு தெரியும்.. ஏன்னா, என் குடும்பத்தில் இருந்து நிறைய பேரை நெருக்கமா பார்த்திருக்கேன்.. அவ்வளவுதானே தவிர, அவர் ஒன்னும் அரசியல்வாதி கிடையாது.. எந்த சமூகசேவையும் செய்தது கிடையாது.

ஊழல்

ஊழல்

இப்போ வேணும்னா அவருக்கு ஈடுபாடு வந்திருக்கலாம்.. அதுக்கு காரணம் வேற. அது இருக்கட்டும், இதுவரை ஊழலே செய்யாத அமைச்சர், எம்எல்ஏ யாராவது இருந்தால், என்முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்று ராதிகா ஆவேசமாக பேசி கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு சத்தம் பிரச்சாரத்தை கூட்டத்தையே அதிர வைத்தது.

 அதிர்ரந்த ராதிகா

அதிர்ரந்த ராதிகா

"ஆமா, மெட்ரோ வாட்டரில் குடிக்கிற தண்ணியில புழு வருதுன்னு சொல்லி எவ்ளோ நாளாச்சு? ஏதாவது நடவடிக்கை எடுத்தாங்களா? சார் வெளியே போயிருக்காரு, சாரு இன்னைக்கு வரலன்னு என்னை விரட்டி விரட்டி அனுப்பறாங்க.. நீங்க ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்ய போறீங்க? நீங்க ஊழல் செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" என்ற அந்த கேள்வி ராதிகாவை மிரள செய்தது..

 மீனா

மீனா

இப்படி கேட்டது ஒரு பெண்.. அதே தொகுதியை சேர்ந்தவர்.. பெயர் மீனா.. கிராமப்புற பாடகி அனிதா குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தவராம். இந்த தொகுதியில் நிலவும் பல பிரச்சனைகள் குறித்து பலமுறை இவர் புகார் அளித்தும், அதன்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை போல தெரிகிறது.. அந்த விரக்தியியே மீனா இப்படி ராதிகாவை பார்த்து கேட்டார்.

சமாளிப்பு

சமாளிப்பு

ஒட்டுமொத்த தொகுதியே தன் பிரச்சாரத்தை பேச்சை சுற்றி நிற்கும்போது, மீனா இப்படி பேசியதை கேட்டு, ராதிகா கொஞ்சம் ஷாக் ஆனார்.. உடனே சுதாரித்து கொண்டு அந்த பெண்ணிடம், "யார் சொன்னாங்க? நான்தான் கேட்கிறேனே, ஊழல் செய்யாத ஒரு அமைச்சரை, எம்எல்ஏவை இங்கே கூட்டிட்டு வந்து நிறுத்துங்க.. என் முன்னாடி இப்போ நிறுத்துங்க.. மொதல்ல இந்த பிரச்சனையை இங்கே பேசிறது இல்லைம்மா.. இதை தடுக்கதான் நாங்க வர்றோம்னு சொல்றது.. எங்களுக்கு அந்த வாய்ப்பு ஒருமுறை தாருங்கள்ன்னு கேட்கிறோம்.. உங்க பிரச்சனையை சரி செய்றோம்னு சொல்றோம்" என்று ராதிகா ஒருவழியாக சமாளித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+