நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
சென்னை: நடிகை ராதிகா இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என சொன்னது சர்ச்சையாகி உள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் 8050 வாக்குச் சாவடிகளாக பதற்றமானவை என்றும் 183 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு கூறியிருந்தார்.

தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக தன்னந்தனியாக வருகை தந்த நடிகர் அஜித், தனது வாக்கை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தார்.
அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு நீல நிற ஜீன்ஸ் பேண்டை அணிந்திருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். கருப்பு எஸ்யூவி காரில் வந்தார்.
அது போல் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார்.
இவர்களைப் போலவே நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
ராதிகாவிடம் விருதுநகர் தொகுதிக்கு செல்லவில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "சென்னையில் எனக்கு வாக்கு உள்ளது. அதை செலுத்த வேண்டி வந்தேன். அடுத்து விமானம் பிடித்து விருதுநகர் செல்கிறேன்.

எனது தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடப்பதாக கட்சியினர் சொன்னார்கள். அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் சொன்னார்கள்" என்றார்.
அடுத்ததாக அவர் "எனக்குத் தெரிந்து மோடியை மட்டும்தான் பிரதமராக அறிவித்திருக்கிறார்கள். வேறு யாரையும் சொல்லவில்லை. ஆகவே மோடி தான் அடுத்த பிரதமர். அது உறுதி" என்றார் ராதிகா.
உடனே செய்தியாளர் ராதிகாவிடம் மக்கள் என்ன மாதிரியான மனநிலையில் உள்ளார்கள் என்று கேட்டார். அதற்கு உடனடியாக ராதிகா சரத்குமார், "மக்கள் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்கிறார்கள்" என்றார்.
மாற்றம் என்றால் 'இந்தியா கூட்டணி வரவேண்டும்' என்கிறீர்களா? என்று ஒரு கொக்கி கேள்வியை போட்டார் செய்தியாளர்.

அதற்கு மிக அமைதியாக சிறிது நேரம் எடுத்து கொண்டு ஒரு க்யூட் ரியாக்ஷ்ன் கொடுத்தார். பின்னர் மெலிதாக புன்னகைத்த ராதிகா, "மாற்றம் என்று இந்தியா கூட்டணியை சொல்லவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றேன். ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோகமாக வெற்றிபெறும்" என்றார்.
அவர் மறுத்து சொன்னாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் ராதிகா மாற்றம் வர வேண்டும் என நாக்குத் தவறி சொன்ன வீடியோ பதிவை போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications