Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: அதிமுக கூட்டணியுடன் பிரிவு ஏன்? ... "ஒரு வார்த்தை" கூட கேட்கல - போட்டுடைத்த ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து இம்முறை தேர்தல் களம் காண்கிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி.

Recommended Video

    தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? Actress Radhika Open Talk | Exclusive interview | Oneindia Tamil

    இந்நிலையில், கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும், திராவிட கழகங்கள் மீதான தன்னுடைய கருத்துக்களை நடிகையும், சமக முதன்மை துணை பொதுச் செயலாளருமான ராதிகா சரத்குமார் நமது 'ஒன் இந்தியா' தளத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

    எப்படி இருக்கீங்க? உங்களுடைய தேர்தல் பிரச்சார பயணம் எப்போது தொடங்குகிறது?

    நல்லா இருக்கேன். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விடுவேன்.

    வேளச்சேரி தொகுதியில் நீங்க போட்டியிடுவதா செய்திகள் வந்தன? திடீரென நீங்களும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடுவதால் இருந்து பின்வாங்க காரணம் என்ன?

    பின்வாங்கல... போட்டியிடலாம்-னு நினைச்சோம். எல்லோரும் அதைப் பற்றி கேட்டாங்க. ஆனா, கால நேரம் ரொம்ப கம்மியா இருந்தது. தமிழக தேர்தலுக்கு ரொம்ப குறைவான காலநேரம் நமக்கு கொடுத்திருக்காங்க. சமத்துவ மக்கள் கட்சியின் 'ஸ்ட்ரென்த்' என்ன என்பதை அறிவதற்கான முதல் தேர்தல் இது. இதுவரை நாங்கள் கூட்டணியில் தான் இருந்திருக்கோம். கூட்டணி தர்மத்துக்காக ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் 5 வருடம் பேசாமல் இருந்தோம்.

    radhikaa sarathkumar about mnm alliance and samathuva makkal katchi success

    ரெண்டாவது முறையாக கூட்டணி வேண்டாம். 'நாங்க போட்டியிடல' என்று சொன்ன போது, 'இல்ல.. நீங்க எனக்காக போட்டியிடனும்'-னு சொன்னாங்க. அப்போ திருச்செந்தூரில் போட்டியிட்டோம். விருப்பம் இல்லாம தான் அங்க போட்டியிட்டோம். இருந்தாலும், அவர் கேட்டுக் கொண்டதால் அந்த கூட்டணி தர்மத்துக்காக போட்டியிட்டோம். அதன் பிறகு அவர் காலமானதால், இனிமேல் ரெண்டு சீட், மூணு சீட்-காக கூட்டணி வைக்கக் கூடாது என முடிவு செய்தோம். ஏனெனில், கட்சியின் வலிமை என்ன என்பதே தெரியாமல் போய்விடும்.

    ஆகையால், இந்த தேர்தலில் மநீம, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஒரு முதன்மை கூட்டணி உருவாக்கி போட்டியிட முடிவு செய்தோம். அதனால் தான் நாங்கள் இருவரும் போட்டியிடவில்லை. ஒருவேளை நாங்கள் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் லாக் ஆகி இருப்போம். நாங்கள் போட்டியிடும் தொகுதியிலேயே அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்திருக்கும். தேர்தலுக்கு குறைவான நேரமே இருக்கும் சூழலில், மற்ற தொகுதிகளுக்கு சென்று எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடியாது. அவர்களை ஜெயிக்க வைப்பதே எங்கள் முதல் குறிக்கோள். அதை மனதில் கொண்டே, நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் ஜெயித்தால் மட்டும் போதாது. எங்கள் வேட்பாளர்களும் ஜெயிக்க வேண்டும். அதுதான் எங்கள் கட்சியின் முதல் கொள்கை.

    என் கணவரும், தலைவருமான சரத்குமார், 'நான் முதல்வர் ஆகிறேனோ இல்லையோ, அடுத்தவங்க ஆகுறதுக்கு நான் வழி வகுப்பேன். அதற்காக உங்களை தயார் செய்வேன்' என்று தான் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் எங்கள் கட்சிக்காரர்களுக்கு என்ற வரும் போது, அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

    நீங்க போட்டியிடாதது ஒரு வகையில் உங்கள் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை தராதா?

    ஆம், அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனா, இப்போ அவங்கவங்க அந்தந்த தொகுதியில் பிஸியாகிட்டாங்க. இனி அவர்கள் இதைப்பற்றி சிந்திக்கக் கூட நேரமிருக்காது. இப்போ அவங்க வெற்றிப் பெறணும், அவங்க வெற்றிக்காக நாங்க பாடுபடணும்.

    radhikaa sarathkumar about mnm alliance and samathuva makkal katchi success

    மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் அரசியலுக்கு வராத நீங்க, இப்போ வந்ததற்கான காரணம் என்ன?

    அரசியலுக்கு நான் அப்பவே வந்துட்டேன். அதாவது, 89ல் வந்தேன். திமுகவிற்காக நான் பிரச்சாரம் செய்தேன். அந்தக் காலக்கட்டத்துல சினிமாவுல இருந்து இல்ல, அந்த துறையில இருந்து 'திராவிட முன்னேற்ற கழகம்'-னு சொன்னாலே எல்லோரும் ஓடி ஒளிஞ்சிருவாங்க. அப்போ, கலைஞர் மேல இருந்த மரியாதையினாலும், அந்த குடும்பத்துடன் இருந்த நெருக்கத்தினாலும், அந்த குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நட்பு இருந்ததாலும் (இப்போ வரையிலும்) அந்த நேரத்தில் தீவிர பிரச்சாரம் செய்தேன்.

    'தீவிர' என்றால் நேரம் காலம் கூட கிடையாது. காலை 5 மணிக்கு தான் கடைசி மீட்டிங் முடிந்திருக்கும். மீண்டும் 9 மணிக்கு கிளம்பிடுவோம். இந்த மாதிரி ஃபுல் டே போகும். அந்த மாதிரியெல்லாம் நான் பிரச்சாரம் செய்து, அவங்க வெற்றியும் பெற்றாங்க. அதற்கு பிறகு நான் என்னுடைய தொழிலில் சற்று கவனம் செலுத்தினேன். எல்லோரும் என்னை தீவிர அரசியலுக்கு வரச்சொல்லி கேட்டாங்க. நான் அதில் ஈடுபாடு காட்டவில்லை.

    பிறகு, ஜெயலலிதா அவர்களை சந்தித்த போது கூட, அவங்க கட்சிக்கான அடையாள அட்டையை கொடுத்தார். 'எனக்கு ஏன் கொடுக்குறீங்க? நான் கட்சியில சேர வரல' அப்படினு சொன்னேன். 'எடுத்துக்குங்க எல்லோரும் பார்க்குறாங்க' அப்படின்னு சொல்லி கொடுத்துட்டாங்க. நான் அவங்க கட்சியில சேர செல்லவில்லை. என் வீட்டுக்காரர் தான் சேர்ந்தார். பிறகு அவருக்கு அங்கு சிறிய மனஸ்தாபம் ஏற்பட வெளியே வந்து தனிக்கட்சி ஆரம்பிச்சுட்டார். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச நாள்ல இருந்து, அவருக்கு நான் சப்போர்ட்டிவா இருக்கேன்.

    நானா வந்து கட்சியில சேரலேயே தவிர, என் கணவருக்காக வந்தேன். Because I Believe in him. அவர் மேல அதிக நம்பிக்கை இருக்கு. அவர் ஒரு Mature Politician. ரொம்ப Intelligent. எல்லா விஷயத்தையும் சிந்திச்சு, ஆராய்ந்து தான் பேசுவார். நல்ல விஷயங்கள் சமுதாயத்துக்கு செய்யணும்-னு இருக்கார். அதுக்காக நான் அவருக்கு துணையாக இருக்கேன். நினைச்சிருந்தா அவர் சினிமாவுல போய் நடிச்சிருக்கலாம். ஆனால், அரசியல் மூலம் தான் சமூக சேவை செய்ய முடியும். அதுல அவர் அவ்வளவு ஆர்வமா இருக்கும் போது, அதுக்கு துணையா இருக்கணும்-னு நினைத்தேன்.

    ஆனா, இந்த முறை இன்னும் கொஞ்சம் தீவிரமா இருந்தேன். ஆனால், இந்த நெடுந்தொடர்கள்ல நடிக்கும் போது, நம்ம டைமே கிடையாது வாழ்க்கையில... அவங்க டைம் தான் எங்க டைம். அதுல 20 வருஷத்துக்கு மேல இருந்துட்டேன். சீரியலில் இருந்து வெளிவந்து, அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே வந்தேன்.

    உங்க கவனமும், அரசியல் பயணமும் இந்த தேர்தலோடு முடிந்துவிடுமா? அல்லது அதற்கு பிறகும் தொடருமா?

    இல்லையே.. நான் அப்படி சொல்லவே இல்லையே.. தேர்தலுக்கு பிறகும் கண்டிப்பாக அரசியலை தொடருவேன்.

    radhikaa sarathkumar about mnm alliance and samathuva makkal katchi success

    அதிமுகவில் இருந்து விலகியது உங்கள் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதே?

    இல்லையே. எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதிமுக கூட்டணியில் இருந்த போதே, 6 மாதங்களுக்கு முன்பு எங்கள் நிர்வாகிகளிடம் பேசிய சரத்குமார், 'இனி ரெண்டு, மூணு சீட்டுக்காக நாம எந்த கட்சியிலும் இருக்க மாட்டோம். அதுவும் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிட மாட்டோம்' என்று சொல்லியிருந்தார். அப்போ கூட அதிமுகவில் இருந்து யாரும், 'ஏன் இப்படி சொன்னீர்கள்? ஏதாவது பிரச்சனையா?'-ன்னு யாருமே எதுவுமே கேட்கல. எல்லோருக்குமே அது தெரியும். ஸோ, நீங்க கட்சியில சலசலப்பு-னு சொல்றது எனக்கு புதுசா இருக்கு. உண்மையிலே எல்லோருக்கும் இதில் சந்தோசம் தான். ஏன்னா, எங்களுடைய தனி முத்திரையை பதிக்க, இது ஒரு சந்தர்ப்பமா எங்களுக்கு அமைஞ்சிருக்கு.

    மநீம தலைமையிலான முதன்மை கூட்டணியில, உங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு பண்ணாங்க, அதுல 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிச்ச நீங்க, மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுத்ததற்கான காரணம் என்ன?

    இளைஞர்கள் கட்சி எங்களுடன் வந்து முதலில் சேர்ந்தாங்க. அவங்களுக்கும் சீட் கொடுக்கணும்-னு மக்கள் நீதி மய்யத்துல சொல்லி, 3 சீட் அலாட் பண்ணோம். ஆனா, கடைசி நேரத்துல, 'அவர்கள் தனித்துப் போட்டியிடுவதாக சொன்னதால், அந்த 3 சீட்டை திருப்பிக் கொடுத்துட்டோம்.

    உங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பிரதானமாக வைத்து பரப்புரை மேற்கொள்வீர்கள்?

    1967 முதல், ஒன்னு திமுக இல்ல அதிமுக என்று தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்கின்றன. அந்த திராவிட கட்சிகளில் கலைஞர் ஒரு பெரிய தலைவர், ஜெயலலிதா ஒரு திறமையான தலைவியாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் இல்லாத அரசியல் களம் இன்று. இருவருமே மாறி மாறி ஆட்சி செய்ததால், மக்களுக்கு நல்லது கெட்டது எது என்று தெரிந்தது. அதனால் மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.

    முதல் மீட்டிங்கில் இருந்து 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்தோடு தான் என் கணவர் பயணத்தையே தொடங்கினார். ஸோ, அந்த மாற்றத்துக்காக வந்து நாங்கள் இன்று நிற்கிறோம். இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும், நிறைய புது Voters வந்திருக்காங்க. அதுல நிறைய பேர், 'ஐயோ... மறுபடியும் இவங்களா? இந்த குடும்ப அரசியல் திமுக வா? ரவுடிகள் ஆட்சியா? என்று 10 வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், அப்போதைய திமுக ஆட்சியின் இன்னல்கள் மக்கள் மனதில் இன்னமும் பதிந்துள்ளது. மக்களும் அதை இன்னமும் மறக்கல. அதுக்குப்பிறகு 10 வருடத்திற்கு அதிமுக ஆட்சி. ஸோ, இந்த இரு ஆட்சிகளும் வேண்டாம்; ஒரு மாற்றம் வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மனதில் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

    சமக-வை கலைத்துவிட்டு சரத்குமார் பாஜகவோடு இணையப்போவதாக ஒரு தகவல் வெளியானதே?

    தகவல் தானே.. இதுக்கு நான் பதில் சொல்லணும்-னா, இன்று நீங்கள் பேட்டி எடுக்கும் போது, எங்கள் சீட் பற்றி கேட்குறீங்க. எங்கள் கூட்டணி பற்றி கேட்குறீங்க. என்ன மக்களுக்காக செய்யப் போகிறோம் என்று கேட்டீங்க. இன்று நடக்கும் சூழலை வைத்துதான் நீங்களே கேள்வி கேட்டீங்க. அப்போ, இந்த கேள்விக்கு பதிலே தேவையில்லை-னு நினைக்கிறேன்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பாக என்ன சொல்ல விரும்புறீங்க?

    ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களியுங்க. ஏன்னா.. அதிகாரத்துல இருந்தா தான் சொன்ன நல்ல விஷயங்கள்.. நினைக்குற நல்ல விஷயங்கள் ஆகியவற்றை உங்களுக்கு சேர்க்க முடியும். அதற்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. ஏன்னா இதுல கமல்ஹாசன் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்டவர். நிறைய சாதிச்சிருக்காரு. கண்டிப்பா, இன்னைக்கு சமுதாயத்துல நல்லது செய்யணும்-னு நினைத்து வந்திருக்காரு.

    திருமதி வானதி சீனிவாசன் சொன்னாங்க, 'அவர்கள் எல்லாம் நடிகர்கள். வருவாங்க, அப்புறம் நடிக்க போயிடுவாங்க-னு சொல்லி இருந்தாங்க. எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர்கள் மேல் நல்ல மரியாதை இருக்கு. இருந்தா கூட, ஒரு டாக்டர் அரசியலுக்கு வந்தா, பேஷண்ட்டை பார்க்க மாட்டாரா? இல்ல வழக்கறிஞர் ஒருவர் அரசியலுக்கு வந்தால், அதன் பிறகு கோர்ட் வாசலுக்கே போக மாட்டாரா? இதெல்லாம் ஒரு விவாதமே கிடையாது. கமல்ஹாசன் ஒரு நடிகர். அவர் இன்னைக்கு நினைத்தால், எவ்வளவோ படங்கள் நடிக்கலாம். எவ்வளவோ சாதிக்கலாம். ஆனால், அவர் ஒரு கடமையை செய்ய வந்திருக்கார். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, இன்று அவருடன் நாங்க எல்லோருமே இணைஞ்சிருக்கோம்.

    அதேமாதிரி, ஐஜேகேவின் ரவி பச்சமுத்து, ஒரு வருங்கால சமுதாயத்திற்கு கல்வித்துறையில் பெரும் சாதனைகள் படைச்சிருக்காங்க. அவங்க முன் வந்திருக்காங்க. அதே மாதிரி சரத்குமார், எவ்ளோ ஆண்டுகளாக அரசியலில் இருந்து எவ்ளோ நல்ல விஷயங்கள் பண்ணிருக்காரு. ஒரு திறமைசாலி. நல்ல ஆளுமை கொண்டவர். இன்று எல்லோரும் கைக்கோர்த்து உங்களை சந்திக்க வந்துள்ளோம். ஒரு மாற்றம் வேண்டும். இன்று திராவிட கட்சிகளுக்கு மாற்றாக. யாரையும் குறை சொல்லி ஆட்சியை பிடிக்க வரல. அவங்க குறைகளை தூக்கி ஓரமா வச்சிட்டு, எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திச்சு, பணத்திற்கு ஓட்டுப் போடாமல் வாக்களிக்க வேண்டும்.

    இது உங்களுக்கு மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு நல்லதும் கூட. அதை மட்டும் சிந்தித்து வாக்களியுங்கள்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+