கண்ணீர் விட்ட விவசாயிகள்! டிராக்டர் வாங்கி தந்த லாரன்ஸ்! விஜய் கட்சி பற்றி நச் பதில்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் விஜய் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, விவசாயிகளுக்கு இலவசமாக ட்ராக்டர் வழங்கி வருகிறார்.

அவர் இந்த அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மயிலாடுதுறைக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
அதற்காக அவர் பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக அவர் திருவாரூர் கடகம்பாடிக்குச் சென்று ட்ராக்டரை விவசாயிகளுக்கு அர்ப்பணித்தார்.
விவசாயிகளுக்கான டிராக்டர் சாவியை அங்குள்ள கல்லூரி மாணவர் ஐயப்பனிடம் அவர் வழங்கினார்.
"இந்த டிராக்டர் யாரோ ஒருவருக்கு மட்டும் சொந்தமாக இருந்தால் அது பயன் தராது. ஆகவேதான் சமூக சேவை எண்ணம் கொண்ட ஒரு இளைஞரிடம் வழங்கி உள்ளேன்.
அவர் தனது கிராமத்திற்கு யாருக்கு எல்லாம் டிராக்டர் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்குவார். அதன் மூலம் ஊரே பயன்படும். அப்படிப் பயன்பட்டால்தான் அதற்காகப் பயன் கிடைக்கும்" என்று கூறினார்.

"நான் உங்களிடம் கேட்டுப் பெறுவதற்காக வரவில்லை. கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். எனக்கு உங்களின் அன்பு மட்டுமே போதும்.
நிறையப் பெண்கள் எங்களுக்குப் பணம் எல்லாம் தேவையில்லை. தையல் மிஷின் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதை வைத்து எங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள். ஆகவே அடுத்து ஒரு 500 தையல் மிஷின் வாங்கத் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு லாரன்ஸ், "அரசியலா? அது எல்லாம் வேண்டாம். மாற்றம். போதும் என்ற எண்ணம். தன்னலமற்ற சேவை. வாழ்வோம். வாழ வைப்போம். இதுவே தர்மம். இதுதான் எனது பாதை. இதில் எங்கேயும் அரசியல் என்பது இல்லை" என்றார்.
அவரிடம் விஜய் அரசியல் எண்ட்ரி பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு லாரன்ஸ், "விஜய் அரசியலுக்கு வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவரும் மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.

அவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவருக்கு என் வாழ்த்துகள். நான் அவருடன் இணைந்து பயணிக்கும் எண்ணம் இல்லை. நான் சேவை செய்து வருகிறேன். அந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. அதைத் தொடரவே வேண்டுகிறேன்" என்றார்.
அரசியல் வேண்டாம் என்றவரைப் பார்த்து தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்ற அச்சமா? என்று ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு ராகவா லாரன்ஸ், "தோல்வி என்று ஒன்று இல்லை. மாற்றுத்திறனாளிகளைப் பாருங்கள். அவர்களுக்கு கை இல்லை. கால் இல்லை. அவர்கள் முயற்சி எடுத்துச் செய்துகாட்டி வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி என்பது வாழ்க்கையில் சின்ன விசயம். அதை நாம் ஒரு வளர்ச்சிக்கான படிக்கட்டாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதைப் போலவே கடந்த சில நாட்கள் முன்னால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள ஆக்கினாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பரமசிவம்.
அவர் தனது வறுமையைப் பற்றி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ராகவா லாரன்ஸ், அவரைப் பற்றி விவரங்களைச் சேகரித்துள்ளார். அதன்பின்னர் அவருக்கு டிராக்டர் வழங்க முடிவு எடுத்தார்.

அதற்காக அந்த விவசாயியைத் தேடி, அவரது கிராமத்திற்கே சென்றார். அங்கே கூடி நின்ற பொதுமக்கள் முன்னிலையில் டிராக்டர் சாவியைப் பரமசிவத்திடம் ஒப்படைத்தார்.
அதைக் கண்ட அந்த ஏழை விவசாயி கண்ணீர் மல்க லாரன்ஸை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.
அதன்பின்னர் பரமசிவம், "நான் அவர் நிறைய உதவிகளை 'மாற்றம்' அறக்கட்டளை மூலம் செய்வதாக அறிந்தேன். உடனே அவரிடம் உதவிக் கேட்டு 2 நாள்களிலேயே எனது வீட்டைத் தேடி விசாரிக்க அவரது அறக்கட்டளை நண்பர்கள் வந்துவிட்டார்கள்.
அதன்பின்னர் இலவசமாக டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். அதை எனக்குப் பயன்படுத்தும் நேரம் போக ஏழை விவசாயிகளுக்கும் என்னை உதவச் சொல்லி இருக்கிறார். ஒரு கடவுள் மாதிரி வந்து உதவிவிட்டுச் சென்றுள்ளார் லாரன்ஸ்" என்கிறார் அவர்.

-
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications