முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரகுராம் ராஜன்.. பெண்களுக்கு ரூ.1000 வழங்க உள்ள நேரத்தில் மீட்டிங்!
சென்னை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்பட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் ஆகியோர் இடம்பெற்றனர்.

ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர்.பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து வெளியேறியவர். தொடர்ந்து, உலகப் பொருளாதார நிலையை ஆராய்ந்து வரும் ரகுராம் ராஜன், தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார்.
அவ்வப்போது, பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார். அந்தவகையில் சமீபத்தில் கூட ரகுராம் ராஜனுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாதம் ரூ.1,000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ரகுராம் ராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரகுராம் ராஜன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications