24 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ளயா? ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்.. காங்கிரஸின் ஒரே சாய்ஸ் இதானா?
சென்னை: காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.. அத்துடன், இவ்வளவு அவசரம் இந்த விவகாரத்தில் ஏன் காட்டப்படுகிறது? என்றும் கேள்விகள் வலம் வருகின்றன.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. ஒட்டுமொத்த காங்கிரசும் அதிர்ந்து போயுள்ளது. இதனால், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களையும், அதிருப்திகளையும் வலிய பதிவு செய்து வருகிறார்கள்..
தற்போது எம்பி யாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குரல்
இது குறித்து பிரியங்கா காந்தி தன்னுடைய ட்வீட்டில், "உண்மையை கண்டு பயந்துபோன ஒன்றிய அரசின் முழு இயந்திரமும் ராகுல் காந்தியின் குரலை கொக்கி அல்லது வக்கிரம் கொண்டு ஒடுக்க முயல்கிறது. என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார்... அவர் உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம்... உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தமாக மாறும்
அதேபோல, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, "ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது மக்களவையில் எதிர்கட்சிகளின் குரல்களை ஒடுக்க நினைக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எங்கள் குரல்கள் இனி மேலும் சத்தமாக மாறும், ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான நமது பிணைப்பு மேலும் வலுவடையும். நாங்கள் அவருடன் நிற்கிறோம்.. இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

சிறைதண்டனை
இதனிடையே, ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் இது குறித்து ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.. "களங்கப்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என்று கூறிய பின்பும், ராகுல் காந்திக்கு சிறைதண்டனை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல் காந்தியுடன் பேசி எனது ஒற்றுமையை தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊர்ஜிதம்
தேசம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும்நிலையில், ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம்... ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனை என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், இதை பாஜகவினர் வழிமொழிந்து வருகிறார்கள்... ஆனால், அதிமுகவின் மூத்த தலைவர் வைகைச்செல்வனோ, ராகுல் விஷயத்தில் இவ்வளவு அவசரப்பட்டு அறிவிப்பு வெளியிட்டிருக்க தேவையில்லை என்று தன் கருத்தை சொல்கிறார்.

செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகையோ, இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், பதவிக்காகவோ, பொறுப்புகளுக்காகவோ, ராகுல் காந்தி கட்சியில் செயலாற்றி கொண்டிருக்கவில்லை.. இந்த நாட்டு மக்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.. தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்காகத்தான் பாதயாத்திரையும் மேற்கொண்டார்.. இதையெல்லாம் பொறுக்க முடியாத அவர்கள், சட்டத்தை வளைத்து, சதிசெயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்..

ஹைகோர்ட்
ஜெயலலிதா வழக்கு, ராஜ்ய சபா வழக்கு என்பதெல்லாம் வேறு, இந்த வழக்கு என்பதே வேறு.. இது ஒன்றும் கிரிமினல் கேஸ் கிடையாது.. அவதூறு சிக்கல் பிரச்சனை.. 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டுக்கு போகும்படி நீதிமன்றமே சொல்லி உள்ள நிலையில், இனிதான் மேல்முறையீடு செல்ல வேண்டும்.. ஆனால், எப்படி 24 மணி நேரத்துக்குள் தகுதிநீக்கம் செய்தார்கள்? இப்படி தகுதிநீக்கம் செய்வதற்கு எந்த சட்டத்தில் இடமிருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை சொல்வது போல் சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.. 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)-ன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர் அல்லது அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்கிறது சட்டம்.. இதைதான் கபில்சிபல் சுட்டிக்காட்டுகிறார்..

கபில் சிபல்
இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையுடன் விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தியை தானாகவே எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். "நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. இடைநீக்கம் அல்லது தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும். தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் (ராகுல் காந்தி) நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியும். " என்கிறார் கபில் சிபல் .

தகுதி நீக்கம்?
ஆக, ராகுல் காந்தியின் தகுதி நீக்கமானது 2 விதமான குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஒன்று, 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட உடன், அவரை யாரும் தகுதி நீக்கம் செய்ய வேண்டாம், அவரின் எம்பி பதவி தானாக தகுதி நீக்கம் ஆகிவிடும் என்கிறது சட்ட வல்லுநர்களின் ஒரு தரப்பு.. ஆனால், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து தகுதி நீக்க நடவடிக்கையை தள்ளி போடலாம் என்கிறது இன்னொரு சட்டவல்லுநர்களின் தரப்பு... இதற்கு நடுவில் காங்கிரஸ் தலைவர்களோ, "தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும்" என்று கூறி வருகிறார்கள். அத்துடன், இந்த நவடிக்கையின் சட்டபூர்வமான தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..

இதுதான் தீர்வா?
இந்த தீர்ப்பை எந்த உயர்நீதிமன்றமும் ரத்து செய்யாவிட்டால், அடுத்த 8 வருடங்களுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சட்ட ஆலோசகர்கள் சொல்வதால், ராகுல் காந்தியின், ஒரே முடிவு நீதிமன்றத்தை நாடுவதாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. தண்டனை அறிவிப்புக்கு இடைக்கால தடையோ, அல்லது தடையோ, விதிக்கப்பட்டால், ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டதாக மக்களவை செயலாளர் வெளியிட்ட நோட்டீஸ் செல்லாது என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.. எப்படி பார்த்தாலும் மேல்முறையீட்டை எதிர்நோக்கியே காங்கிரஸ் தரப்பு மும்முரமாகி கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை ஹைகோர்ட்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.. தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், அந்த உத்தரவை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு ஏற்கப்படாவிட்டால், அதற்கு பிறகு சுப்ரீம்கோர்ட்டை நாட உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications