100வது நாளை நோக்கி ராகுல் காந்தியின் நடைபயணம்! கோலாகலமாக கொண்டாடுவோம் வாங்க! தமிழக காங்கிரஸ் அழைப்பு
சென்னை: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணமானது நாளை 100வது நாளை அடைவதால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்னும் 50 நாட்களில் ராகுல் தனது இந்திய ஒற்றுமை பயணத்தை ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றி நிறைவு செய்யவுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்த பதிவின் விவரம் வருமாறு;

இந்திய ஒற்றுமை பயணம்
மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நெடிய நடைப் பயணத்தை மேற்கொண்டார். இந்த நடைப்பயணம் 12 மாநிலங்களில் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.

ஜாதி, மத, இன, மொழி
தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அமோக ஆதரவு அளித்தனர். அத்தகைய பயணங்களில் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் இந்த நாடு பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் ராகுல்காந்தி பிரச்சினைகளை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.

அதிகாரக் குவியல்
தற்போது நிலவி வரும் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவது ஆகியவை குறித்தும், வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசியலமைப்பில் அதிகாரக் குவியலைக் கண்டித்தும் உரத்தக் குரலில் கேள்விக் கணைகளை எழுப்பினார். இதன்மூலம் நாட்டு மக்களிடையே தலைவர் ராகுல்காந்தியின் கேள்விக் கணைகள் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தது.

வழிபாட்டுத் தலங்களுக்கு
மதச்சார்பற்ற கொள்கையை வலிமை சேர்க்கிற வகையில் சர்வ மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தலைவர் ராகுல்காந்தி உணர்வுப்பூர்வமாக வழிபட்டதை நாட்டு மக்கள் அனைவரும் எண்ணி எண்ணி பெருமிதம் அடைந்தார்கள். இதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக கருத்தியலுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது அமைதி, அன்பு, சகோதரத்துவம், சமநிலைத்தன்மை என்கிற கொள்கைகள் வலிமை பெற்றன.

காலை 6 மணிக்கு
இந்திய ஒற்றுமை பயணம் நாள்தோறும் அதிகாலை 6 மணிக்கு தொடங்கி சேவாதள அணிவகுப்பு மரியாதையோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியப் பாடல்கள் இசைக்கப்பட்டு உன்னதமான உணர்வுகளோடு நாள்தோறும் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு நெகிழ்வு தரக்கூடிய பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்திய தேசிய காங்கிரசை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமையேற்று நடத்தி வரலாறு காணாத சாதனைகள் நிகழ்த்திய அன்னை சோனியா காந்தி, எதிர்கால இந்தியாவுக்கு வலிமை சேர்க்க இருக்கிற பிரியங்கா காந்தி மற்றும் சமீபத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட இந்திய சமூகத்தின் அற்புத சாதனைகளைப் படைத்த பல்வேறு அறிஞர் பெருமக்கள் இந்த பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பெருமை சேர்த்தனர்.

100வது நாள்
பல இடங்களில் பெருந்திரளான பெண்கள், இளைஞர்கள், தலித் சமுதாயத்தினர், சிறுபான்மை இனத்தினர் குறிப்பாக ஆதிவாசிகளோடு தலைவர் ராகுல்காந்தி நடனமாடிய காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிகழ்வை,டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க
அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் மூலம் தலைவர் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றி குறித்தும் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications