காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கும் தவெக! அப்போவே உஷாரான ராகுல் காந்தி! இதை கவனிச்சீங்களா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை தவெக நாடியிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு விஜயின் தந்தை சந்திரசேகர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சினாரியோவை பார்க்கும் போது, இப்படியெல்லாம் முன்னரே நடக்கும் என்று ராகுல் காந்தி சரியாக கணித்துதான், ஸ்டாலினுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் தொடங்கியது முதலே, காங்கிரஸின் நிலைப்பாட்டில் இரட்டை தன்மை தெரிந்தது. குறிப்பாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை எழுப்ப தொடங்கியிருந்தது. தமிழகத்தில் இதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஆட்சியில் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது. இப்படி இருக்கையில் அமைச்சர் பதவி வேண்டும், துணை முதல்வர் வேண்டும் என்று கேட்க கூடாது என்று திமுக கறார் காட்டியிருந்தது.
இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்கள் விஜய்யைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்றும், அவர் வெறும் நடிகர் அல்ல, அரசியல்வாதி என்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டுமானால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதே சரி என ராகுல் காந்தி கருதுவதாகச் செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாக தவெக உடன் கூட்டு சேர்வதை பற்றி பேசினாலும், தலைவர்கள் அப்படி உடைத்து பேசவில்லை.
என்னங்க இது, திமுக கூட்டணியில இருந்துக்கிட்டு, விஜய்க்கு சப்போர்ட் செய்யுறாங்க? என்று கேள்வி எழுந்தபோது.. இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் தொகுதி பங்கீட்டீல் கூடுதல் சீட்டை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது என்று திமுகவினர் அப்போதைக்கு விஷயத்தை சமாளித்தனர். ஆனால், இன்று காங்கிரஸின் வார்த்தை உண்மையாகியிருக்கிறது.
அதேபோல தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கடைசி நேரத்தில் வந்தது, சென்னைக்கு பக்கத்தில் பிரச்சாரம் செய்தாலும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்காதது, பிரச்சாரம் முடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் டெல்லி சென்றது எல்லாம், திமுகவுடன் நெருக்கமாக இருக்க விரும்பவில்லை என்கிற சிக்னலாகத்தான் இருந்தது.
இதையும் திமுக மறுத்திருந்தது. அவசர வேலைவயாகத்தான் ராகுல் காந்தி உடனே கிளம்பியிருப்பார். இல்லையெனில், எங்கள் தலைவரை வந்து பார்த்துவிட்டுதான் போயிருப்பார் என்று திமுகவினர் ரைட்டப்களை எழுத தொடங்கியிருந்தனர்.
ஆனால், இன்று திமுக தோல்வியடைந்ததை பார்க்கும்போது ராகுல் காந்தி அன்று சரியாகத்தான் கணித்திருக்கிறாரோ என்று சொல்ல தோன்றுகிறது. வாக்களர்களின் அதிருப்தி, அப்படியே விஜய்க்கு ஆதரவாக போவதை கணித்த ராகுல், பிரச்சாரத்திற்கு வந்து அப்படியே கிளம்பி சென்றிருக்கிறார். இன்று காங்கிரஸை தவெக அழைத்துக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதால் நிச்சயம் தவெக பக்கம் போகும் என்று பலரும் கூறுகின்றனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications