திமுகவில் நிலவும் இனம் புரியாத அதிர்ச்சி.. இனிமே இப்படித்தான்.. போனை போட்ட ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, திமுகவில் இனம் புரியாத ஒருவித அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன் அதிகாலையில் நேருவின் சகோதரருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ரெய்டுதான் திமுக உள்ளே கலவர மனநிலையை கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக திமுக அரசு தொடர்ந்த வழக்கில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதால் அந்த வெற்றி கொண்டாட்டத்தில், நேருவுக்கு எதிரான ரெய்டு அதிர்ச்சி மறைந்து போயிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் வழக்கு
ஆளுனர் ஆர். என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரியான தீர்ப்புகளை வழங்கியது. பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர் காலம் தாழ்த்தியதை விமர்சிக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை, அறிவிப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
திமுக அதிர்ச்சி
உச்ச நீதிமன்றம் வழங்கியதால் அந்த வெற்றி கொண்டாட்டத்தில், நேருவுக்கு எதிரான ரெய்டு அதிர்ச்சி மறைந்து போயிருக்கிறது. 3 நாட்களுக்கு முன் அதிகாலையில் நேருவின் சகோதரருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் சென்னை அலுவலகங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் சந்தேகத்தை கிளப்பியிருப்பதாகவும், எனவேதான் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான அடையாறு எம்.ஆர்.சி.நகரில் உள்ள TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் முதலில் ரெய்டு தொடங்கியது. பின்னர் நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீட்டிலும் அதை தொடர்ந்து தற்போது நேருவின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.
அமலாக்கத்துறை சோதனை
இந்த சூழலில், நேற்று மதியம், நேருவின் சகோதரர் ரவியை விசாரணைக்காக வரவழைத்த அமலாக்கத் துறை அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் திணறடித்துள்ளது.
அதாவது, நீதிமன்ற தீர்ப்பின் கொண்டாட்டத்தை திசைத்திருப்ப, நேருவின் தம்பி ரவியை அழைத்திருந்தது அமலாக்கத்துறை. ஆனால், இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் கொண்டாட்டத்தில் மூழ்கினர் திமுகவினர். அதேசமயம், இரவு வரை ரவிச்சந்திரனை விடுவிக்காததால், கொண்டாட்ட மூடில் இல்லாமல் பதட்டத்துடனே இருந்தார் அமைச்சர் நேரு.
இதனை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று இரவு நேருவிடம் பேசியவர், ''கவலைப்படாதீர்கள் ; இதை விட எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து சமாளித்தவர். தேர்தல் வரும் வரை இப்படி எல்லாம் ரெய்டு நடப்பது வழக்கம்தான்.
ரெய்டுங்கிறது அரசியலுக்காக நடக்கிற சம்பவம்னு உங்களுக்கே தெரியும் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஏன் மக்களே இது எல்லாம் தெரியும். அதனால் கவலைப்பட வேண்டாம்'' என்கிற ரீதியில் தெம்பூட்டியிருக்கிறார். முதல்வரின் ஆறுதலில் சற்று உற்சாகமாகியிருக்கிறார் அமைச்சர் நேரு.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications