ரெய்டு பயமா செல்லூர் ராஜூ அவர்களே? முன்னாள் எம்பி போட்ட வீடியோவால் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் ஜெயலலிதா போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டி இருந்தார். இதை வீடியோவாக ட்விட்டரில் ஷேர் செய்துள்ள முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, ரெய்டு பயமா செல்லூர் ராஜூ அவர்களே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தென் தமிழகத்தில் நடைபெறும் தொடர் கொலையை தடுக்க நெல்லையில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் உள்ள ரவுடிகளை ஸ்டார்மிங் ஆபரேஷன் மூலம் கண்டறிந்து அவர்களை கைது செய்து ரவுடித்தனத்தை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டார்
அதன்பேரில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் ஸ்டார்மிங் ஆபரேஷனில் ரவுடிகள் தேடி தேடி கைது செய்யப்படுகிறார்கள். இதுவரையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினரை ஒழிக்கும் நோக்கில் ரவுடிகள் கைது செய்யப்படுவதால் ரவுடிகள் பயந்து போய் தலைமறைவாகி வருகிறார்கள். ஆனாலும் விடாமல் தேடி சென்று போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

செல்லூர் ராஜூ பாராட்டு
இதனிடையே மதுரை மாநகராட்சி ஆணையரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தி
களை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அது போல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது என்றார்.
Recommended Video

ரத்து
மேலும் கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்துவிட்டார்கள். அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.
|
பாராட்டிய தலைவர்கள்
செல்லூர் ராஜூ மட்டுமல்ல இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்கள். இதனிடையே ஸ்டாலினை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீடியோவை ஷேர் செய்துள்ள முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, ரெய்டு பயமா செல்லூர் ராஜூ அவர்களே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டுறவு வங்கி முறைகேடு
அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலினை செல்லூர் ராஜு பாராட்டுவதாக செய்தி உள்ளது. அதே வீடியோவில் அடுத்த செய்தியாக கூட்டுறவு சங்கங்களில் நடந்துள்ள முறைகேடுகளை அடுத்து, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கோரிக்கை வைக்கப்பட்டது. 516 கோடி முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக செல்லூர் ராஜூ மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனறு கேசி பழனிசாமி பகிர்ந்த வீடியோவில் செய்தி முடிகிறது. இதன் மூலம் ரெய்டு பயம் காரணமாக செல்லூர் ராஜூ முதல்வர் ஸ்டாலினை பாராட்டினாரா என்று கேசி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications