ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. ரயில்களில் வரப்போகும் புதிய வசதி!
சென்னை: ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் பெட்டிகளின் உள்பகுதியிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பெட்டியின் நுழைவு பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில்களின் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்களின் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், ரயில்களில் கடத்தல்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கவும் , தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோல் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 6,646 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ரயில் பெட்டிகளில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால், ரயில்களில் சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலும் உடனே கண்டுபிடித்துவிட முடியும்.
இந்நிலையில், ரயில் பெட்டிகளில் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவு வாயிலில், அதாவது இரு பக்கமும் கதவுபகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ரயிலில் ஏறுபவர்கள், இறங்குபவர்களையும் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த முடியும்என்பதால் இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்கிறதாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications