சென்னை எழும்பூரில் இருந்து செல்லும்.. எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை: சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னையில் தங்கி வசித்து வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

பண்டிகை, விடுமுறை என எல்லா தேவைகளுக்கும் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் போக்குவரத்து சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. ஒரு நாள் ரயில் சேவை பாதித்தாலும் சென்னையே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு ரயில் போக்குவரத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர்.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) நவம்பர் 21-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12668) நவம்பர் 22-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20681) நவம்பர் 20 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 8.55 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (20682) நவம்பர் 21 ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (22663) நவம்பர் 23 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பகல் 2.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ஜோத்பூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22664) நவம்பர் 26 ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் மாலை 5.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதால் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications