Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிசர்வேஷனில் மாற்றம்.. அதைவிடுங்க, ரயிலில் ஓடும் எலிகள்.. ரயில் பயணிகளிடம் ரயில்வே வைத்த வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பும் வந்தவண்ணம் உள்ளது.. அதேபோல பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது.. எனவே, இதுதொடர்பான நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது.. தற்போது, ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இப்போது 60 நாட்களுக்கு முன்பாக சாதாரண ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.

Railway Ticket Reservation trains

எனினும், பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முக்கியமாக, போலி ஐஆர்சிடிசி கணக்குகள், சிறப்பு மென்பொருள் மூலம் விரைவு ரயில்களில் முறைகேடாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

ரயில் டிக்கெட் முன்பதிவு

எனவேதான் இந்த பிரச்சனையை தீர்க்க, ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.. அதன்படி, ஸ்லீப்பர் உட்பட அனைத்து வகை டிக்கெட்டுகளுக்கும், ஆன்லைன் முன் பதிவு துவங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி காலை 8:00 முதல் 8:15 வரை, ரயில்வே கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பவர்கள் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும். ஆதார் இணைக்காதவர்கள், காலை 8:15க்கு பின், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயிலில் ரிசர்வேஷனுக்கு ஆதார் கட்டாயம்

இதுதொடர்பாக வெளியாகியிருந்த அறிவிப்பில், "ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தடுக்க அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி ஐஆர்சிடிசி இணையதளம், செயலியில் ஆதார் எண் சரிசார்ப்பு மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இதர பயணிகள் 15 நிமிடங்களுக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்" என்று ரயில்வே அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எலிகள், நாய்கள்

இந்நிலையில், தெற்கு ரயில்வே பயணிகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது.. தின்பண்டங்களை கீழே வீசிவிடுவதால் நாய், எலிகள் தொல்லை அதிகரிக்கிறதாம்.. எனவே, இதை தவிர்க்க, திண்பண்டங்களை கீழே வீசுவதை தவிர்த்து, ரயில் நிலையங்களை துாய்மையாக வைத்திருக்க உதவுங்கள் என்று பயணிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில் நிலையங்களில், தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ரயில் நிலையங்களை துாய்மையாக வைத்திருப்பது ஒரு கூட்டு முயற்சி.

ரயில் பெட்டிகளில் உணவு பொட்டலங்கள்

"துாய்மை இந்தியா இயக்கம்" போன்ற முதன்மை முயற்சிகள், தொடர்ச்சியான பராமரிப்பு பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எனினும், குப்பையை வீசுவது, ஒரு தீவிரமான கவலையாகவே உள்ளது. நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில், காலி தண்ணீர் பாட்டில்கள், தின்பண்ட உறைகள், பாலிதீன் பைகள், தேநீர் கோப்பைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் பிற அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் சிதறி கிடக்கின்றன.

இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடு, ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளை பாதிப்பதோடு, ஒட்டுமொத்த பயணியரின் அனுபவத்தையும் பாதிக்கிறது. பயணியர் வீசும், உணவுக் கழிவுகளை தேடி, எலிகள், தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் வளாகத்திற்குள் வருகின்றன. இது துாய்மை மற்றும் சுகாதாரத்தை பாதிக்கிறது, பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

தூய்மை மரக்கன்றுகள்

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், ரயில் பயணிகள் சங்கங்கள், சமூக அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து, இன்று முதல் அக்., 2 வரை தூய்மை, மரக்கன்றுகள் நடுவதில் கவனம் செலுத்துகிறது.

தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், கோப்பைகள் அல்லது எந்தக் கழிவுகளையும், நடைமேடை, தண்டவாளம் மற்றும் ரயில்களுக்குள், பயணியர் வீச வேண்டாம்" என்று ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

ரயிலில் ரீல்ஸ் - ரூ.1000 அபராதம்

ரயிலில் யாராவது ரீல்ஸ் எடுத்தால், குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஏற்கனவே ரயில்வே எச்சரித்திருந்தது..

ரயில்வே போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இதற்காகவே தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக கூறியிருந்த நிலையில், இப்போது ரயில்களில் தின்பண்டங்களை வீசாதீர் என்று ரயில்வே விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் பயணிகளின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+