திருமா பேசும்போது ‛ஆஃப்பான மைக்’.. கோபத்தில் மின் ஊழியரை தாக்கிய விசிகவினர்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து இன்று சென்னை சென்ட்ரலில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது மைக் 2 முறை ஆஃப் செய்யப்பட்டதால் மின்ஊழியரை பிடித்து விசிகவினர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் விசிக தொழிற்சங்க வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து சென்னை சென்ட்ரலில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.
இதில் விடுதலை தொழிலாளர் முன்னணியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மேடையில் திருமாவளவன் பேச முயன்றார். அப்போது மைக் ‛ஆஃப்' ஆகிவிட்டது. இதனால் திருமாவளவன் பேசாமல் இருந்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டென்ஷன் ஆனதோடு, மின் அலுவலகத்தில் இருந்து உதவியாளர் சரவணனிடம் புகாரளித்தனர். அதன்பிறகு மைக் ஆன் செய்யப்பட்டது.
அதன்பிறகு திருமாவளவன் பேசினார். அப்போதும் பாதியிலும் திடீரென்று ‛மைக்' வேலைசெய்யவில்லை. மைக்கிற்காக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு திடீர் மின்தடைக்கு எஸ்ஆர்எம்யூ அமைப்பினர் இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நினைத்தனர்.
இதையடுத்து மீண்டும் அவர்கள் மின் ஊழியர் சரவணனிடம் முறையிட்டனர். அப்போது மைக் இணைப்புக்கான ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விசிகவினர் மின் ஊழியர் சரவணனை தாக்கினர். இதுபற்றி அறிந்தவுடன் உடனடியாக ரயில்வே போலீசார் தலையிட்டனர்.
விசிகவினரிடம் சிக்கிய மின் ஊழியரை போலீசார் மீட்டனர். அதன்பிறகு இருதரப்பிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தனர். அதன்பிறகு முறையாக மைக்கிற்கான மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி பாதிப்பு இன்றி நடந்து முடிந்தது. முன்னதாக திருமாவளவன் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்ட சம்பவம், மின்ஊழியரை விசிகவினர் தாக்கிய சம்பவம் உள்ளிட்டவற்றால் சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications