ரயில் டிக்கெட் எடுக்க யுடிஎஸ் செயலி வச்சிருக்கீங்களா? இதை பார்க்காமல் சீசன் டிக்கெட் எடுக்காதீங்க
சென்னை: முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட், ரயில் எங்கே வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி என ரயில்களின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி தற்போது பயணிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் விரைவில், யுடிஎஸ் செயலி பயன்பாட்டை நிறுத்த ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை புக் செய்ய யுடிஎஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ரயில்களில் புறநகர் மின்சார ரயில் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் பயணிகள் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

ரயில்வே யுடிஎஸ் செயலி
ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் போய் காத்துக்கிடந்து டிக்கெட் எடுத்து முடிப்பதற்குள் சில நேரங்களில் ரயில்களை மிஸ் செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதுபோன்ற நேரங்களில் பயணிகளுக்கு யுடிஎஸ் டிக்கெட் செயலி பெரும் வரப்பிரசாதம் போல அமைந்தது.
யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி ஆரம்பத்தில் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பிறகு பயணிகள் நலன் கருதி இந்த தூர வரம்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல, ரயில் நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. யுடிஎஸ் செயலியை பயணிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பயணிகளுக்கு கட்டண சலுகையும் ரயில்வே அறிவித்து இருந்தது.
ரயில் ஒன் செயலி அறிமுகம்
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ரயில்வே ரயில் ஒன் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் ரயில்களுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அனைத்து ஆப்ஷன்களும் உள்ளன. அதாவது முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட், ரயில் எங்கே வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி என ரயில்களின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும்
இந்த செயலி தற்போது பயணிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் விரைவில், யுடிஎஸ் செயலி பயன்பாட்டை நிறுத்த ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த செயலி நிறுத்தப்படலாம் என்றும் இது தொடர்பாக ரயில்வே பெயரில் உள்ள சுற்றறிக்கையும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யுடிஎஸ் செயலி நிறுத்தம் செய்யப்படலாம் என்று வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளை கவலை அடைய வைத்துள்ளது. யுடிஎஸ் செயலியில் பலரும் தங்கள் சீசன் டிக்கெட்டுகளை எடுத்து வைத்து இருக்கும் நிலையில், இந்த செயலி நிறுத்தப்பட்டால் தங்கள் டிக்கெட் என்னவாகும் என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
புதிதாக புக் செய்ய முடியவில்லை
இதற்கிடையே, யுடிஎஸ் செயலியில் சீசன் டிக்கெட்டுகளை புதிதாக புக் செய்ய முடியவில்லை என்று மும்பை பயணிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும் யுடிஎஸ் செயலி செயல்பாட்டை நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி இருப்பதால், யுடிஎஸ் செயலி படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications