எவ்வளவு எகத்தாளம்.. ஜாலியாக வாழ்ந்த ஜெயராம்.. கடனை ரயில்வே தலையில் கட்ட பார்த்தவருக்கு தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வேயின் குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ந் தேதி இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதம் அனுப்பிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெயராம் பல வங்கிகளில் கடன் வாங்கி செலவு செய்துள்ளார் தனது கடனை அடைக்க நூதன திட்டம் போட்ட அவர், பணம் கேட்டு ரயில்வேக்கு மிரட்டல் விடுத்திருக்கிறாராம். அவர் அந்த கடிதத்தில் கூறிய தகவல்கள் போலீசாரையே ஆடிப்போக வைத்துள்ளது. விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.

சிலர் அளவுக்கு மீறி கடனை வாங்கி செலவு செய்வார்கள். சக்திக்கு மீறி கடன் வாங்கிவிட்டு, அந்த கடனை அடைக்க முடியாமல் கிறுக்குத்தனமாக யோசிப்பார்கள். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஒருமுறை இப்படித்தான் அதிகமான கடனை அடைக்க விரும்பியவர், அதற்காக நகை அடகு நிறுவனத்தில் கொள்ளையடிக்க போனார். கடைசியில் ஜெயிலுக்கு தான் போனார். இன்னும் சில ஊர்களில் வங்கிகளில் கொள்ளையடிக்க போய், சிறைக்கு போனவர்களும் உள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர் இன்னும் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். அவர் அதற்காக ரயில்வேயை தேர்ந்தெடுத்துள்ளார். அவரது முரட்டு யோசனையால் இப்போது கம்பி எண்ணி வருகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

Chennai railway loan

தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் சென்னையில் இருக்கிறது. இங்குள்ள தெற்கு ரெயில்வேயின் குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ந் தேதி இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், 3 இடங்களில் விபத்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், கேட்கும் பணத்தை கொடுத்தால், திட்டத்தை கைவிடுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, குடோன் கட்டுப்பாட்டாளர், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து இ-மெயில் அனுப்பிய மர்ம நபரை தேடி வந்தார்கள். இந்த நிலையில், நேற்று காலை சென்னை சென்ட்ரல் மின்சார ரெயில் நிலையத்தில் இ-மெயிலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 32 வயதாகும் ஜெயராம் என்பது தெரியவந்து. அவரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், ஜெயராமிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவில் ஜெயராம் பணிபுரிந்து வந்துள்ளார். அத்துடன் அந்த பகுதியில் பார்ட் டைமில் கார் ஓட்டும் வேலையும் செய்து வந்துள்ளார். ஜெயராமுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது மனைவி தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடப்பா ஜெயராம் பல வங்கிகளில் கடன் வாங்கி செலவு செய்து வந்தாராம். ஒரு கடனை அடைக்க, அடுத்த கடன் என ரூ.11 லட்சம் வரை கடன் வங்கி ஆடம்பரமாக வாழ்ந்தாராம்.

கடன் வாங்கியவர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன வேதனை அடைந்த ஜெயராம் சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், குண்டூர் ரயில்வே அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடப்பா ஜெயராம் இ-மெயில் மூலம் அனுப்பிய மிரட்டல் கடிதத்தில், "3 பெரிய விபத்துகளை நடத்த 8 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டியிருக்கிறோம். உயர் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறேன். என்னை தொடர்பு கொண்டு எனக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டால் நாசவேலை திட்டத்தை நான் உடனே கைவிட்டு விடுவேன்" என அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் ஜெயராம் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+