எல்லா வந்தே பாரத் ரயிலும் ஒரே மாதிரி தெரிந்தாலும்.. ஒரு வித்தியாசம் இருக்குது.. ஓ! இதுதான் காரணமா?
சென்னை: திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலில் முந்தைய ரயில்களை போல் அல்லாமல் இதன் லோகோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த மாறுதல் ஏன் என்பது குறித்த விவரங்ககளை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தி நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு, நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பிறகு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. பிற ரயில்கள் போல் அல்லாமல் வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்தே இருக்கும்.
வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வழித்தடத்திலும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், கேரள மாநிலத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக
இந்த நிலையில், கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலில் லோகோ வித்தியாசமாக இருந்தது பயணிகள் மத்தியில் கவனம் பெற்றது. அதாவது திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் சீட்டா லோகோ இடம் பெற்றிருந்தது.
பிற வந்தே பாரத் ரயில்களை போல வசதிகள்தான் இந்த ரயிலில் இருந்தாலும் லோகோ மட்டும் மாறுபட்டு இருப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், " இது ஒரு மேம்படுத்துதலுக்கான நடைமுறை என்றும் காலப்போக்கில் முன்னேற்றத்திற்காக லோகவில் சிறு வித்தியாசம் காட்டப்படுகிறது" என்றும் கூறினார்.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை துவக்க காலத்தில் விடப்பட்ட ரயில்களில் சென்னையில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) குறிக்கும் வகையில் ஐசிஎப் லோகோ இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு வந்தே பாரத் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த லோகோவாக மாற்றம் செய்யப்பட்டது. பிறகு இந்தியில் வந்தே பாரத் என ரயிலின் முன் எழுதப்பட்டு இருக்கும் வகையில் லோகோ மாறியிருந்தது. தற்போது, சீட்டா லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications