சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்
Recommended Video

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

கோவையின் பல பகுதிகளிலும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்வதால் வெயிலின்றி குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கருமேங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நாகை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது. தவிர திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மிதமானது முதல் நல்ல மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்து வந்த மழை, தற்போது சென்னையில் காலை 9 மணி முதல் பெய்கிறது.
மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், வளசரவாக்கம், போரூர், ராமபுரம் வடபழனி, சாலி கிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என நகரின் பல முக்கிய பகுதிகள் அனைத்திலும் மிதமானது முதல் நல்ல மழை இரவுக்கு பின் மீண்டும் தொடர்கிறது.
இதனால் தலைநகர் சென்னையின் கிளைமேட் குளிர்ச்சியாக மாறியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் காலாபேட், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இன்று அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலநிலையும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications