இன்று இரவு முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு.. பஞ்சாங்கம் சொல்வது நடக்க போகுதோ!
பஞ்சாங்கம் சொன்னபடி சென்னைக்கு ஆபத்து இருக்கிறதா?
Recommended Video

சென்னை: அப்படீன்னா பஞ்சாங்கம் சொல்வது கூடிய சீக்கிரம் நடக்க போகுதா?
வருஷ கடைசின்னாலே அதுவும் டிசம்பர் என்றாலே உள்ளுக்குள் நமக்கு உதறல்தான். சுனாமி வந்து போனதில் இருந்தே நமக்கு டிசம்பர் மாசம் வந்தாலே நேரமே சரியில்லாமல் போய்விடுகிறது.
இந்த வருஷம் ஆரம்பிக்கும்போதே பஞ்சாங்கம் என்ன சொன்னது? வறட்சி அல்லது வெள்ளத்தினால் சென்னைக்கு ஆபத்து என்றுதான் சொல்லி வந்தது.

அடுத்தடுத்த புயல்கள்
இதனால் எல்லோருமே சென்னை அழிய போகிறது, சென்னை வெள்ளத்தால் மூழ்க போகிறது, என்றே நினைத்து பயந்தும் வந்தோம். அதற்கேற்றார்போல் சென்னை வானிலை ஆய்வு மையம், புயல் ராமச்சந்திரன், வானிலை ஆர்வலர் செல்வகுமார், ஆகியோர் அடுத்தடுத்து தமிழகத்துக்கு புயல்கள் வர உள்ளதாகவும், கனமழை பெய்யக்கூடும் என்றும் சொல்லி வருகிறார்கள்.

பனி பொழிவு
இதில் எல்லோருக்கும் பீதி கிளப்பியது கஜா புயல்தான். ஆனால் அந்த புயலால் டெல்டா மாவட்டங்கள்தான் நாசமானதே தவிர சென்னைக்கு பாதிப்பில்லை. இதற்கு அடுத்தாற்போல் பேய்ட்டி புயல் வந்தது. கடுமையான பனி பொழிவு காரணமாக இந்த முறையும் புயல் பாதிப்பு இல்லாமல் சென்னை தப்பி விட்டது.

தப்புகிறது சென்னை
இன்று இரவு முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அடித்து ஊத்த போகிறதாம் மழை. ஆனால் இதுவும் மாமல்லபுரம்வரை மட்டுமே வந்துபோய்விடுமாம். சென்னைக்கு இல்லையாம். சென்னை இந்த முறையும் தப்புகிறது. இப்படி சென்னை தப்பி விட்டது என்று நாம் நினைத்து சந்தோஷப்பட்டாலும் இன்னொரு நிகழ்வு நடந்து வருவதை நாம் கவனிக்கவே இல்லை.

வறட்சி ஆரம்பம்
இப்படியே மழை பெய்யாமல் போனதால், சென்னையில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் தற்போது 1.5 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சென்ற வருடம் 5 டி.எம்.சி நீர் இந்த சமயத்தில் இருந்த போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது ஏரிகளில் வறட்சி ஆரம்பித்துள்ளது. இப்போதே தண்ணீர் வறட்சி என்றால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வறட்சி எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

வறட்சி துவங்கும்
மேலும் இந்த வருஷ வடகிழக்கு பருவமழையை நம்பியிருந்த நிலையில் வழக்கத்தை விட சுமார் 21 விழுக்காடு அளவிற்கு குறைவான அளவு மழைபெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததன் காரணமாக வறட்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நனைக்கும் மழைதான்
இதை பற்றி வானிலை ஆர்வலர் செல்வகுமாரிடம் நாம் கேட்டபோது? "இன்னைக்கு இரவே மழை ஆரம்பித்துவிடும். 22 மற்றும் 23-ம் தேதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். 24-ம் தேதி திங்கட்கிழமை தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்படும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை. சென்னைக்கு நனைக்கும் மழை மட்டுமே இருக்கும்" என்றார்.

உயிர் கொடுக்கும் மழை
ஏற்கனவே சென்னை ஏரிகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது, இதுவரையும் மழை இல்லை, இப்பவும் நனைக்கும் மழை என்றால், வறட்சி மேலும் அதிகரிக்காதா? என்று கேள்வியை முன்வைத்தோம். அதற்கு, "கடுமையான மழை இல்லை என்றாலும், உயிர்கொடுக்கும் மழை உள்ளது. அதனால் வறட்சி என்பது போன்ற ஒரு நிலை ஏற்படவே செய்யும். ஆனால் இது மார்ச் மாதத்திலிருந்து குறைய ஆரம்பித்துவிடும்.

பேய்ட்டி புயல்
2019-ஜனவரி 5,6,7இல் தென் தென்தமிழகத்தில் மழை அமையும், அதன் பிறகும் ஜனவரியில் இருக்கிறது. பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே மாதமும் இருக்கிறது. அதனால் நாம் மழை நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய காலம் இது. பேய்ட்டி புயல் வஞ்சித்து சென்றதே இந்த இந்த நிலை வரக் காரணம்" என்று பதிலளித்தார்.
மீம்ஸ் போட்டோம்.. புயலை பார்த்து மிரண்டோம்.. எல்லாம் சரி.. ஆனால் குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை வந்துரும் போலிருக்கே!












Click it and Unblock the Notifications