கனமழை பெய்ய போகிறது.. தமிழ்நாட்டிற்கு வானிலை மையம் எச்சரிக்கை.. எங்கெல்லாம் மழை பெய்யும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கேரளா, கர்நாடகாவிலும், தென் தமிழ்நாட்டிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாகக்கோவில், திருநெல்வேலியிலும் சிறு சிறு ஆறுகளில், குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. சில இடங்களில் சாலைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து உள்ளது. முக்கியமாக கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மழை
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எங்கு?
நீலகிரி, திண்டுக்கல், கன்னியகுமாரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும்.

சென்னை
சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நகரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 27 செமீ மழை பெய்துள்ளது. பேச்சிபாறையில் 24 செமீ மழை பெய்துள்ளது. பெருஞ்சானியில் 11 செமி மழை பெய்து உள்ளது. மணிமுத்தாறு, சூலக்கோட்டு பகுதியில் 10 செமி மழை பெய்து உள்ளது.

அருவி
மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதே போல ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவுக்கு விழுகிறது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நடைபாதையிலும் தண்ணீர் ஓடுகிறது.

கடல்
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து விட்டு விட்டு கன மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிப்பு தொடர்ந்து மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிற்பீர்கள் நீரில் மூழ்கி அளிக்க உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications