ஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை
சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
Recommended Video
வங்க கடலில் புயல் சின்னம் உருவாக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் என்னமோ வாட்டி வதைத்து வந்தது.

ஆனால், இன்று மாலை முதல், நகரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மேகமூட்டத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மதுரவாயல் பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பெரிய அளவுக்கான மழை இல்லை என்ற போதிலும் கூட வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை இருந்தது.

புறநகர்ப் பகுதி மட்டுமின்றி நகரின் உள் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. அடையாறு, முகப்பேர் மேற்கு, கோட்டூர்புரம், கொளத்தூர், ஈக்காடுதாங்கல், கோயம்பேடு, அயப்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், வேளச்சேரி, குன்றத்தூர், மறைமலை நகர், வளசரவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.
வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில், அதாவது மாலை 6.30 மணிக்கு மேல், பெங்களூரு நகரில் மழை கொட்டி தீர்த்தது.
அங்கு சென்னையை விடவும் அதிக அடர்த்தியுடன் கன மழை கொட்டியுள்ளது. தெற்கு பெங்களூரில், பொம்மனஹள்ளி, சில்க் போர்டு, பிடிஎம் லேஅவுட், பன்னேருகட்டா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications