என்னா குளிரு.. சென்னையில் 2ஆவது நாளாக செம மழை.. மக்கள் ஹேப்பி #ChennaiRains
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன் மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. காற்றின் திசை மற்றும் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

சென்னை
இந்த நிலையில் சென்னையில் இன்று கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேலப்பனசாவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

ராயப்பேட்டை
நகரின் ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அசோக் பில்லர், கோயம்பேடு, கிண்டி, வடபழனி, முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து மக்களின் மனங்களும் குளிர்ந்தது. இந்த நிலையில் இன்றைய தினமும் மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2ஆவது நாளாக மழை பெய்து வருகிறது.

புறநகர்
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், வண்டலூர் , செம்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முதல் மேகமூட்டத்துடன் மந்தமாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

மாணவர்கள் அவதி
நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, எழும்பூர், முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு வரும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications