Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Rain: சென்னைக்கு இனி குளு குளுதான்! 2 நாட்களில் வானிலையில் நடக்க போறதை மட்டும் பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. உள் மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் சர்வ சாதாரணமாக 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 17 ஆம் தேதி முதல் சென்னை உள்பட வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம், நேற்று மாலை கூட சென்னையில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் - மே மாத வெப்பத்தை போல மிககடுமையாக வெப்பத்தின் தாக்கம் உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வீட்டில் இருந்தல் கூட ஒருநிமிடம் கூட ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு உஷ்ணம் அதிகமாக இருந்தது.

rain-likely-in-north-tamil-nadu-including-chennai-from-the-17th-tamil-nadu-weatherman-predicts

தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

வெளியில் போனால் கூட மதிய நேரத்தில் வியர்வையில் குளிக்கும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. இதனால், வெப்பம் தணிந்து மழை எப்போது பெய்யும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், வரும் 17ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

வடதமிழகத்துக்கு இனி குளுகுளு நாட்கள்

சென்னை உள்பட வட தமிழகத்திற்கு குளு குளு நாட்கள் திரும்ப வர போகின்றன. 17 ஆம் தேதியில் இருந்து வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 19 ஆம் தேதியில் இருந்து மழை வெளுத்து வாங்கும்.

இன்னும் இரண்டு நாட்கள் வெப்ப நாட்களை சமாளித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, நிலமை மாற போகிறது. 16 ஆம் தேதி இரவில் இருந்தே மழைப்பொழிவின் தீவிரம் அதிகரிக்க தொடங்க தொடங்கும். குறிப்பாக சென்னை மற்றும் வடதமிழகத்தில். இரவில் பெய்யும் குறுகிய மழையாக இன்றி, இடியுடன் கூடிய மழையை எதிபார்க்கலாம்.

27 ஆம் தேதி வரை தொடரும்

19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீடித்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த பகுதிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதற்கு ஏற்றபடி திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன் தினம் மற்றும் நேற்று மாலை கூட சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு திடீரென வானிலை மாறி, மழை பெய்து வருகிறது. மேற்கு வங்க கடலில் நேற்று முன் தினம் மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நேற்று காலை 05.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இது 08.30 மணி அளவில், மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஜூலை.15ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16, 17 ஆம் தேதிகளில்

வரும் 16ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 17-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20 ஆம் தேதி வரை

ஜூலை.18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.19 மற்றும் 20ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+