தமிழகத்தில் பரவலாக மழை.. 3 நாட்களுக்கு தொடரும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: வட தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள்பகுதிகளில் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் தரங்கம்பாடியில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை, செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள், தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications