ஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்!
Recommended Video

சென்னை: சென்னையில் இன்று என்ன ஒரு அழகான காலை பொழுது... இதமான காற்று லேசான சாரல் மழை, மூடிய மேகங்கள் என மொத்த சென்னையும் இதமாக காணப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மேலும் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெளியே போக வழியில்லாம் அடைத்து கொண்டு சாலைகளில் தேங்கி நின்றது.

ஒரு நாள் மழைக்கே சென்னை பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்த சூழலில் நேற்று இரவு சென்னையில் பரவலாக மழை பெய்தது. நேற்று பகலிலும் வெயில் பெரிதாக இல்லை. சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று விடிந்த காலைப்பொழுது சென்னைவாசிகளுக்கு நல்ல அற்புதமான காலைப்பொழுதாக இருந்தது. எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு உதிக்கும் சூரியன் மேகத்திற்கு நடுவே மறைந்து உதித்தது. இதனால் வெயில் இல்லை. குளிர்ந்த காற்று அடித்துக்கொண்டே இருந்தது.
அப்படியே தொடர்ந்து லேசான சாரல் மழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் என்ன ஒரு அருமையான கிளைமேட் என இதமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications