சென்னையில் நள்ளிரவில் மழை.. வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை பெய்தது.
சென்னையில் வானம் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பகல் நேரங்களில் வெயில் வாட்டியது.
மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது.

சென்னையில் மழை
சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல்
மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகாலை வரை மழை
சென்னையில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல்
வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

வெளுத்த மழை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்த மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

விடிய விடிய கனமழை
விழுப்புரம் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது,

இடியுடன் கனமழை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

2 நாட்களுக்கு நீடிக்கும்
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications