சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களுக்கான இலவச பேருந்து பயணம்.. அடையாள அட்டை கட்டாயம்.. அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கட்டணமின்றி பயணம் செய்யும்போது அடையாள அட்டை கட்டாயம் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்லவன் இல்லத்தில் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

    Raja Kannappan says about ID proof must for Transgenders

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொற்று எண்ணிக்கை குறைந்ததால் முதலமைச்சர் முடிவின் படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. 1,800 பேருந்துகள் சென்னையிலும், பிற மூன்று மாவட்டங்களில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.

    பயணிகளின் வருகை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தினசரி இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும். அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம்.

    மகளிர், மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவியாளர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பயணச்சீட்டு மானியமாக ரூ.1,200 கோடியை அரசு வழங்குகிறது. பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பேருந்துகளுக்கு வண்ணம் மாற்றுவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து...5 வீடுகள் தரைமட்டம் - 3 பேர் பலி சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்து...5 வீடுகள் தரைமட்டம் - 3 பேர் பலி

    ரூ.1,000 பயண அட்டைக்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கெனவே பயண அட்டை வைத்திருப்பவர்கள், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத் துறையை நல்ல துறையாக மாற்றுவேன் என்றார்.

    English summary
    Transport Minister RajaKannappan says that Identity card is must for Trans and Physically challenged persons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X