சேலையில் அழகாக இருக்கிறாய்.. ஆனால் சேலை இல்லாமல் இருந்தால் அதைவிட அழகா இருக்கும்.. ராஜகோபாலனின் சாட்
சென்னை: சேலையில் அழகாக இருக்கிறாய், ஆனால் சேலை இல்லாமல் இருந்தால் அதைவிட நீ ரொம்ப அழகாக இருப்பாய் என வாட்ஸ் ஆப்பில் 59 வயதான ராஜகோபாலன் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஆசிரியர் போன்று கல்வி போதிக்கும் குருக்களுக்கு அழகா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவனில் வணிகவியல் துறையில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ராஜகோபாலன். 59 வயதான இவர் நங்கநல்லூரில் மனைவி, தாய் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார்.
இவர் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இவர் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தவறு
இந்த நிலையில் அவரை கைது செய்த போது தான் எந்த தவறையும் செய்யவில்லை என சாதித்தார். மேலும் மாணவிகள் அனுப்பிய ஆதாரங்களை காண்பித்தவுடன் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டார். அது போல் அவரது மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அழிப்பு
அதில் ஏராளமான விஷயங்கள் அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இவற்றை சைபர் கிரைமில் கொடுத்து ரிக்கவரி சாப்ட்வேர் மூலம் போலீஸார் தகவல்களை எடுத்துள்ளனர். அவரது வாட்ஸ் ஆப் சாட்டுகளை எடுத்து பார்த்தால் போலீஸாரையே தலைசுற்ற வைத்துள்ளதாம்.

மாணவிகள்
வாட்ஸ் ஆப்பில் மாணவிகளுக்கு அவர் அனுப்பிய தகவல்களை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக உள்ளதாக கூறுகிறார்கள். சாதாரண போன் செய்தால் ரெக்கார்டு செய்யப்பட்டால் மாட்டிக் கொள்வோம் என நினைத்த ஆசிரியர், மாணவிகளின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கால் செய்துள்ளார்.

சேலை கட்டிய புகைப்படம்
மாணவிகளுக்கு முதலில் அனுப்பும் மெசேஜ்களின் அடிப்படையில் அவர்கள் பதில் தருவதை பொறுத்து அடுத்தடுத்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அதில் அவர் அனுப்பிய மெசேஜ்களில் மாணவியின் புகைப்படத்தை அனுப்ப சொல்லுவார், அதிலும் சேலை கட்டியிருக்கும் புகைப்படத்தை அனுப்ப சொல்வாராம்.

ஆபாசம்
மாணவி அனுப்பிவிட்டால் அதனை பார்த்து விட்டு "நீ சேலையில் நன்றாக இருக்கிறாய். ஆனால் அந்த சேலை இல்லாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய்" என கொஞ்சமும் வயதுக்கும் தொழிலுக்கும் ஒவ்வாத வகையில் பேசுவாராம். வெறும் 16,17 வயது குழந்தைகளிடம் 59 வயதுள்ள ராஜகோபாலன் எப்படி இத்தகைய ஆபாசமாக பேசினார் என தெரியவில்லை. முதலில் எப்படி அவருக்கு மனம் வந்தது என்றும் தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications