சுற்றி வளைத்துப் பேசிய ராஜன்செல்லப்பா! விஷயத்துக்கு வரச் சொல்லிய சபாநாயகர்! சட்டமன்றம் ருசிகரம்!
சென்னை: சட்டமன்றத்தில் சுற்றி வளைத்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவிடம், ஒற்றை வரியில் விஷயத்துக்கு வருமாறு சபாநாயகர் அப்பாவு கண்டிப்பு காட்டினார்.
மதுரை மாநகராட்சியில் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக கோரிக்கை வைக்க எழுந்த ராஜன் செல்லப்பா, கடந்த அம்மா ஆட்சியில் என்ற வார்த்தையை அடிக்கடி குறிப்பிட்டார்.
இதனிடையே நேரமின்மை காரணத்தை சுட்டிக்காட்டி, விஷயத்துக்கு வாங்க என ராஜன் செல்லப்பாவுக்கு சபாநாயகர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

சட்டமன்றம்
தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்து பேசினார். அப்போது மதுரை மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்ட 13 வட்டங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை மட்டுமே இருப்பதாகவும் அதை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நேரு பதில்
முன்னதாக கடந்த அம்மா ஆட்சியில் என்ற வார்த்தையை அடிக்கடி குறிப்பிட்டு பேசிய ராஜன் செல்லப்பாவிடம், என்ன கேட்கனுமோ அதை ஒற்றை வரியில் பேசி, விஷயத்து வருமாறு சபாநாயகர் அப்பாவு அட்வைஸ் செய்தார். அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ராஜன் செல்லப்பாவும், பாதாள சாக்கடை திட்டம் குறித்த விஷயத்து வந்தார். மேலும், அமைச்சர் நேருவிடம் இருந்து நல்ல அறிவிப்பை மதுரை மக்களுக்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மீண்டும் திட்டம்
ராஜன் செல்லப்பாவுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும் கழிவுநீர் கால்வாய் திட்டம், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் ஏற்கனவே தன்னிடம் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். மதுரை மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள 13 வட்டங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு மீண்டும் ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றும் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகள் நீட்டிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Recommended Video

தொகுதி எம்.எல்.ஏ.
ஹார்விபட்டி, திருநகர், சின்ன அனுப்பனடி, ஐராவதநல்லூர் உள்ளிட்ட 13 வார்டுகள் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் இக்கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications