Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிலுவை".. பொறுக்கித்தனமா இருக்கு.. பூரா ஆபாச பேச்சு.. டிஜிபி ஆபீஸ் வாசலில் பொங்கிய ராஜேஸ்வரி பிரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை கைது செய்ய வேண்டும் என போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.. இதையடுத்து கடும் கோபத்துடன், விஜய் ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் விஜய்யின் லியோ பட 'நான் ரெடி' பாடல் வெளியாகியிருந்த அதற்கு புகார்கள் கிளம்பியது.. எனவே, ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் மீது கோர்ட்டில் கேஸ் போடப்போவதாக "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

Rajashwari Priya slams Actor Vijay and complaint against in Chennai DGP Office, what happened

முதல் காட்சி: அத்துடன் ஒரு பேட்டியில் ராஜேஸ்வரி பிரியா, "ஒரு பாடலை பாடும்போது, அதில் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி கொள்கிறார்.... சர்க்கார்" படத்திலும் முதல் காட்சியே சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.. அவரையெல்லாம் நான் மனுஷனாகவே பார்க்கலை. இத்தனை இளைஞர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.. ஒரு தலைவராக பார்க்கும் அளவுக்கு, அவரே தன்னை கிரியேட் செய்தும் கொள்கிறார்.. அப்படி இருக்கும்போது, அதற்கான அடிப்படை பண்பு ஏதாவது இருக்கணும்தானே?
விஜய்க்கு ரசிகர்கள் 3 வயதில் இருந்து இருக்கிறார்கள்.. மாஸ் ஹீரோவா அவரை பார்க்கிறார்கள்.. ஆனால், சமூகத்தின் மீதும் அக்கறை இருக்கணும் இல்லையா? எதை பாடறோம் என்றுகூட தெரியாமல் பாடுவதா? பொறுக்கித்தனமான வரிகள்.. இப்படியான கீழ்த்தரமான வரிகளை பாடுவதற்கு விஜய்க்கு எப்படி மனசு வந்தது? கிறிஸ்தவர்கள்: சிலுவையை கழுத்தில் போட்டிருக்கிறார்.. சிறுபான்மையினர் கிறிஸ்தவ மக்கள் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கணும்.. விஜய் மீது வழக்கும் தொடரணும்..

ஹீரோவா: ஒரே ஒரு மாணவன் வீணாக போனாலும், அதற்கு விஜய் பொறுப்பேற்பாரா? லோகேஷ் கனகராஜ் பொறுப்பேற்பாரா? கோடிக்கணக்கான ரூபாயை நீங்கள் சம்பாதித்துக் கொண்டு போய்டுவீங்க.. ஆனால், இங்கே சமூகம் சீரழியுதே? யார் பொறுப்பு இதுக்கு? டைரக்டர் சொல்றதை கேட்டுட்டு, உங்களையும் வீணாக்கிட்டு, பணம் பார்த்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு தலைவனா? ஒரு ஹீரோவா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் ராஜேஸ்வரி பிரியாவை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. இந்நிலையில், நேற்றைய தினமும், விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்ததுடன், சரமாரியான புகார்களை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. அப்போது வாக்குவாதமும் சேர்ந்தே வெடித்தது.. சலசலப்பும் பரபரப்பும் சூழ்ந்தது.

ஆபாசம்: பல போலி ட்விட்டர் ஐடியில், ஆபாச வார்த்தைகளால் என்னை மிரட்டி வருகின்றனர். பணம் படைத்த விஜய்க்கு இது சாதாரண விசயம்.. மக்களுக்காக போராடும் என்னையே ஆபாச வார்த்தை சொல்லி விஜய் அச்சுறுத்துகிறார். எல்லா மிரட்டல் பதிவிலும் விஜய்யை டேக் செய்துள்ளனர். வாங்கிய பணத்திற்கு வேலை பார்க்கிறோம் என்பதை நிரூபிக்கவே, என்னை மிரட்டும் பதிவுகளில் விஜய்யை டேக் செய்கின்றனர்.

(ராஜேஸ்வரி பிரியா இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, "பிற நடிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபடுவது இல்லையா? விஜய் மட்டும் தான் செய்கிறாரா? விளம்பரத்திற்கு இதை செய்கிறீர்களா?" என்று கேட்டதுமே, கடுமையான ஆத்திரம் அடைந்தார் ராஜேஸ்வரி ப்ரியா. பிறகு மறுபடியும் ஆவேசமாக பேசத் தொடங்கினார்)

ஆடை: இதே நான் தான் "ஆடை" படத்தின் போஸ்டரை ஒட்டவிடாமல் கிழித்தேன், கஞ்சாப்பூ கண்ணால பாடலுக்கு எதிராக குரல் கொடுத்தது நான் தான், சர்க்கார் படத்தில் புகை பிடித்தபோது எதிர்ப்பு தெரிவித்தேன். 53 சதவீதம் பேர் புகைப்பிடிக்க காரணம் நடிகர்கள் தான் என, ஆய்வு சொல்கிறது. இதற்கு முன் ரஜினிகாந்த்தையும் நான் பேசியிருக்கிறேன்.

(மறுபடியும் அதே செய்தியாளர் குறுக்கிட்டு, "பெண்களை ஆபாசமாக சந்தானம் எல்லாம் சித்தரிக்கிறார்களே. அதை பற்றி எதுவும் சொல்லாமல் விஜய்யை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்றார்)

உடனே ராஜேஸ்வரி பிரியா, நீங்கள் விஜய் ரசிகரா? அப்படின்னா அந்த பக்கம் போய்விடுங்கள்... உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? விஜய் ரசிகரை வைத்து கேள்வி கேட்குறீங்களா? முதல்ல என்னை பற்றி உங்களுக்கு தெரியுமா? நான் யார்னு தெரிந்து கொண்டுவந்து அப்பறம் என்னை விமர்சியுங்கள்.." என்று சீறினார்.

கொந்தளிப்பு: இந்த பேட்டி முடிந்ததுமே, விஜய் ரசிகர்கள், ராஜேஸ்வரி பிரியாவை சரமாரியாக திட்டி தீர்க்க துவங்கி உள்ளனர்.. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, இப்படியெல்லாம் செய்கிறார் என்றும், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளக்கூட, விஜய்தான் தேவைப்படுகிறார், இனியும் விஜய்யை விமர்சித்தால், நாங்கள் சும்மா இருக்க போவதில்லை என்றும் சோஷியல் மீடியாவில் கொந்தளித்தபடி உள்ளனர்.

ஆபாசம்: தன்னுடைய செல்போனுக்கு ஆபாச தகவல்கள், ஆபாச போட்டோக்கள் அனுப்புவது மட்டுமின்றி, வெவ்வேறு எண்களில் இருந்து, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ராஜேஸ்வரி பிரியா கூறியிருந்தார்.. அத்துடன், இதற்கெல்லாம் விஜய் தான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும்.. விஜய் படம் படைத்த நபர் என்பதை நிரூபிக்க, டிவிட்டர் பக்கத்தில் பல போலிக்கணக்குகளை உருவாக்கி பணம் கொடுத்து, இப்படி ஆபாச வசனங்கள், வார்த்தைகளால், வீடியோக்கள் கொச்சையான வார்த்தைகளை கூறி திட்ட வைத்துள்ளார்.

சாமானிய பெண்களால் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. வாங்கிய பணத்திற்காக ஐடி, ஃபேக் ஐடி நிருபிக்கிறது" என்று பகிரங்கமாக கூறியிருப்பது, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+