"பலிகடா".. அதுக்கு இப்படியா அழுகுறது? தெரியாத்தனமா திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு.. ராஜேஸ்வரி பிரியா
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் தெரியாத்தனமாக, திமுகவுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.. இந்த ஆட்சியில் மக்களால் வாழவே முடியவில்லை.. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உட்பட, கள்ளச்சாராய விவகாரம் உட்பட, துறை வாரியாக பல பிரச்சனைகளில் மக்கள் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டுட்டு இருக்கிறார்கள்" என்று வேதனையையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அக்கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து விலகினார்.

பின்னர், "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை தன்னுடைய ஒவ்வொரு பேட்டிகளின் மூலமும் விடாமல் எடுத்து சொல்லி வருபவரும்கூட.
ராஜேஸ்வரி பிரியா: சமீபகாலமாகவே, திமுகவையும் இடித்துரைத்தே வருகிறார். குறிப்பாக, கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் ஆவேசமடைந்த ராஜேஸ்வரி பிரியா, திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை கூறி, ஆட்சியை கடுமையாகவும் சாடியிருந்தார்.. இப்போது செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் ஏராளமான கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன், சில கேள்விகளையும் திமுக அரசை நோக்கி எழுப்பி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
"செந்தில் பாலாஜி விவகாரத்தில், சரியான போக்கில்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.. செந்தில் பாலாஜி மீது வழக்கும் இருக்கிறது.. எனவே, அவரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படலாம் என்ற உத்தரவு இருக்கும்போது, அதைத்தான், அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.. இது ஒன்றும் சட்டவிரோதமான செயலோ, சட்டத்துக்கு புறம்பான செயலோ, அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எதுவுமே கிடையாது.. காரணம், திமுகவில் இவர் சேருவதற்கு முன்பிருந்தே இந்த வழக்கு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
முக்கியத்துவம்: இந்த வழக்கு நடந்து கொண்டிருப்பது தெரிந்தும்கூட, அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை தந்துள்ளது திமுக அரசு.. அதனால், இந்த விஷயத்தில் திமுகதான் வரலாற்று பிழையை உண்டாக்கியிருக்கிறது.. கைது செய்யும்போது, இந்த அளவுக்கு அழுதால் எப்படி? இந்த காட்சியை, இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ பார்க்கும்போது, அவர்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க?
ஊழல் என்பது எந்த அளவுக்கு தமிழகத்தில் இருக்கிறது என்பதை இப்படி வெளிப்படையாக காட்டிக் கொண்டிருப்பது அவமானமாகவே கருதப்படுகிறது. தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.. கடந்த 2016-ல் தலைமை செயலகத்தில், ராம்மோகன் ராவ் ரெய்டு நடத்தும்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் என்ன சொன்னாரு?
"அமலாக்கத்துறைக்கு தனியாக அதிகாரம் உள்ளது. அதனால்தான் தலைமை செயலகம் வரைக்கும் வந்துள்ளனர்.. அதனால் ஊடக நண்பர்கள் எல்லாரும், முதல்வரை நோக்கி ஓடுங்க.. முதல்வரிடம் போய் கேள்வியை கேளுங்க" என்று அன்று சொன்னதே இன்றைய முதல்வர் ஸ்டாலின்தானே?
தவறான புரிதல்: மாண்புக்கு மீறின செயல், புறவாசல் வழியாக வருகிறார்கள், ஆட்சிக்கு களங்கம் என்றெல்லாம் இன்றைக்கு சொல்கிறாரே முதல்வர் ஸ்டாலின்? ஒரு தனி மனிதன் ஊழல் குறித்து, வழக்கு நடந்து, அதற்காக ஆய்வு நடத்தும்போது, ஆட்சி என்று பேசுகிறார்கள் என்றால் இவர்களின் புரிதல் என்ன? இவர்களுக்கு அரசியல் புரிதலே இல்லாமல், மக்களிடம் தவறான கருத்தை கொண்டு செல்கிறார்கள்.
தலைமை செயலகத்துக்கு, அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்களும் கூடவே சென்றிருக்கிறார்கள்.. அப்படியானால், சட்டத்துக்கு விரோதமான ஒன்று ஏதோ நடந்துள்ளது என்றுதானே அர்த்தம்? 17 மணி நேரம் விசாரணையும் நடந்துள்ளது.. ஒருவேளை ஏதாவது சிக்கியிருக்கலாம்.. அதைபற்றி இன்னும் உண்மைத்தன்மை தெரியவில்லை.. ஆனால், விசாரணை தேவைப்படும் என்பதால்தானே தலைமை செயலகம் சென்றிருக்கிறார்கள்..
நல்ல முதல்வர்: ஒரு நல்ல முதல்வராக நடந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டத்தை அதன் வழியில் விட்டுவிட வேண்டும்.. ஒருவேளை, குற்றம் நடந்து, ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால், "கடமை தன் கடமையை செய்யும்" என்று சொல்லிவிட்டு, போய்ட்டே இருக்கணும். அதைவிட்டுட்டு, ஒட்டுமொத்த திமுகவினரும், ஒரே இடத்தில் குவிந்து, அமைச்சர்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து, செந்தில் பாலாஜி என்னமோ, எந்த தவறுமே செய்யாத மாதிரியான தோரணையை உருவாக்காதீங்க.
முலாம்: ஊழல் செய்தது உண்மை என்றால், அவர்கள் மீது எடுக்கப்படும் உண்மையான நடவடிக்கைதான் இதெல்லாம்... இதற்கு முலாம்பூசி மக்களிடம் தவறான பிரதிபலிப்பை ஏற்படுத்துவது மோசமான செயல். கடந்த 2016-ல் அமலாக்கத்துறை தனியாக செயல்படுகிறது என்று சொல்லிவிட்டு, இன்று பாஜகவாக செயல்படுகிறது என்று சொல்லுவதுதான், திமுகவின் அரசியல். .
கடந்த ஆட்சியில் என்னென்னவெல்லாம் சொன்னீங்களோ, அதை நீங்களே இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள்.. அன்னைக்கு
கோபேக் சொன்னீங்க, கருப்பு கொடி பிடிச்சீங்க.. இப்போ அதெல்லாம் மாறிவிட்டதையும் நாங்கள் கண்கூடாக பார்த்துட்டுதானே இருக்கோம்.
ஆட்சிக்கலைப்பு: மக்கள் தெரியாத்தனமாக உங்களுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.. இந்த ஆட்சியில் மக்களால் வாழவே முடியவில்லை.. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உட்பட, கள்ளச்சாராய விவகாரம் உட்பட, துறை வாரியாக பல பிரச்சனைகளில் மக்கள் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டுட்டு இருக்காங்க.. ஆட்சி தங்களிடம் உள்ளது, தங்களை எதுவுமே செய்ய முடியாது என்ற எண்ணம்தான், ஆட்சி கலைப்பிற்கான அறிகுறியாக திருப்பிபோட்டுவிடும்.
இதற்கு முன்பு கள்ளச்சாராயம் பிரச்சனை தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை.. இதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு இங்கே சீர்குலையவே இல்லை என்று நான் சொல்லவிலை.. ஆனால், இவையெல்லாம் இப்போது இந்த ஆட்சியில் அதிகமாகிவிட்டது.. ஒரு கவுன்சிலருக்கு, ராணுவ வீரரை தாக்கக்கூடாது என்றுகூட தெரியாதா? இவர்கள் செய்வது எல்லாமே தேசிய அளவிலான பிரச்சனைகள்.. ஆனால், தேசிய அளவிலான தவறைகூட, மிக சாதாரணமாக செய்துவிட்டு கடந்து போகிறார்கள்..
இவர்களின் அதிகார துஷ்பிரயோகமே, எதிராக திரும்ப போகிறது.. 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சி நடப்பதற்கான வாய்ப்பு குறைவு.. மக்களுக்கே பிடிக்கல.. ஊழல், கொள்ளை அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சட்டப்படியாகவே இந்த ஆட்சி கலைக்கப்படும். அதற்கான வாய்ப்பு கண்டிப்பா இருக்கு" என்கிறார் ராஜேஸ்வரி பிரியா.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஊழலை ஊற்றுக்கண்ணாகத் திறந்துவிடுகின்றனர்.. அதற்கு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், ராஜேஸ்வரி பிரியா போன்றோரின் கருத்துக்களும், மக்களின் கவனத்தை குவித்து வருகின்றன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications