Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ஈகோ.. காங்கிரசை குழி தோண்டி புதைத்த 3 சீனியர்களின் ஈகோ.. ராகுல் சுதாரிக்கணும்.. இல்லைன்னா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய இதய மாநிலங்கள் என்று அழைக்கப்படும்.. 3 முக்கியமான இந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் தற்போது வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வீழ்ந்துவிட்ட நிலையில்... தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் மாபெரும் தோல்வியை சந்தித்து உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரம் தவிர 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வந்தன. மிசோரம் தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன.

Rajasthan to Madhya Pradesh: How Three Seniors Dug a Hole for Congress Party in Hindi Heart Land?

காங்கிரஸ் படுதோல்வி; ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 69 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

சத்தீஸ்கரில், பாஜக 64 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 39 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும். இதனால் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற தவறி உள்ளது.

சீனியர்கள் ஈகோ: இந்த தேர்தல் தோல்விக்கு காங்கிரசின் 3 சீனியர்கள் ஈகோதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர்களின் விடாப்பிடித்தனம்.. தலைமை மீது அவர்களுக்கு இருந்த "கண்ட்ரோல்'".. மாறி வரும் அரசியல் சூழ்நிலையை புரிந்து கொள்ளாதது ஆகியவை தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி கமல் நாத் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உடன் ஏற்பட்ட மோதலால்.. சிந்தியா பாஜகவில் சேர்ந்தார். சிந்தியாவிற்கு முதல்வர் பதவியை பகிர கமல்நாத் விரும்பவில்லை. இருவருக்கும் இடையே ஈகோ மோதல்.. சிந்தியா பாஜகவிற்கு சென்று அங்கே ஆட்சியும் கவிழ்ந்தது. கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;

இப்போது சிந்தியா இல்லாமல் கமல்நாத், திக் விஜய் சிங் என்று இரண்டு சீனியர்கள் மட்டும் முன்னடத்திய தேர்தலில் காங்கிரஸ் வீழ்ந்துள்ளது.

காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியது கமல் நாத்திற்கு பெரிய சிக்கல் ஆனது. அங்கே சிந்தியா போன்ற போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அரசியல் ரீதியாக கமல்நாத் பெரிய தலைவர்தான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானிலும் இதே நிலைதான் அங்கே அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. சச்சின் பைலட் உறுதியாக காங்கிரஸ் உடன் இருந்தார். ஆனால் அவரை கவிழ்க்க ஈகோவுடன் கெலாட் செயல்பட்டார்.

தேசிய தலைவர் பதவி கிடைத்தும் கூட.. ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட மறுத்து அடம் பிடித்தார். அவரின் அடம் காரணமாக காங்கிரஸ் அங்கேயும் வீழ்ந்து உள்ளது. 3 சீனியர்கள் இந்த செயல் காங்கிரஸ் கட்சியை இந்தி ஹார்ட் லேண்டில் கிட்டத்தட்ட புதைத்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+