4 அதிமுக மாஜிக்கள் மீதான ஊழல் வழக்கு.. அமைச்சர் ரகுபதி கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டத் துறை அமைச்சராக இருப்பவர் ரகுபதி. இவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளில் விசாரணை தொடங்க இசைவு ஆணைக்கான ஒப்புகல் வழங்கவும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆளுநருக்கு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் செய்தி தொலைதொடர்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது.
இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் அவர்கள் வழங்கவில்லை.
ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையையும் வழங்க வேண்டும்" என அமைச்சர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.வி .ரமணா ஆகியோரின் வழக்குகள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளது.
அதற்கு காரணம் , பி.வி. ரமணா மற்றும் சி விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது. எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கில் மாநில அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. கே.சி. வீரமணி வழக்கில் விவரங்கள் கிடைத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!

Click it and Unblock the Notifications