தலைவா தலைமையேற்க வா.. ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு
சென்னை: ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு அழைக்க போயஸ் கார்டன் வீடு முன்பாக ரசிகர்கள் கூடியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் பல ஆண்டுகளாக அழைத்து வந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அவர் 2019-ஆம் ஆண்டு தெரிவித்தார். அவர் அரசியல் கட்சியை இப்போது தொடங்குவார், அப்போது தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயதசமி அன்று கட்சியை தொடங்குவார் என அறிவிப்புகள் வெளியான நிலையில் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. அண்மையில் ரஜினி எழுதியாக ஒரு அறிவிப்பு வெளியானது.

ரசிகர்கள்
அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுகிறேன் என இருந்தது. இதை கண்ட ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்த நிலையில் தனது பெயரில் உலா வரும் அறிக்கை பொய்யானது என்றும் அதில் உள்ள தகவல்கள் உண்மையில்லை என்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே உண்மை என்றும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

மருத்துவர்கள்
ரஜினியின் இந்த அறிக்கை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது என்றாலும் அந்த போலி அறிக்கையில் உடல்நிலை பாதிப்பால் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இப்போது ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் கூறியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்புறம்
இதனால் கலங்கிய ரசிகர்கள் தலைவா நீங்க வந்தா மட்டும் போதும், மற்றதை எல்லாம் நாங்கள் பார்த்துகிறோம், மக்களிடம் நாங்கள் போய் ஓட்டு கேட்கிறோம் என ரசிகர்கள் போயஸ் தோட்ட தெரு, அண்ணா அறிவாலயத்திற்கு எதிர்புறம் என போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

பரபரப்பு
இந்த நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு 20-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்கள் ரஜினியை சந்தித்து அரசியலுக்கு வர அழைப்பு விடுக்கவே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஏராளமானோர் கூடிவிடுவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போயஸ் தோட்ட பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications