சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா காலர் ட்யூனுக்கு ரஜினி மன்றம் போட்டி.. ஆட்சி மாற்றத்தை வைத்து செல்போன்களில் முற்றுகை!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலர் ட்யூனுக்கு போட்டியாக ரஜினி மக்கள் மன்றமும் ஆட்சி மாற்றம் குறித்த காலர் ட்யூனை பரப்பி வருகின்றனர்.

Recommended Video

    கொரோனா காலர் ட்யூனுக்கு ரஜினி மன்றம் போட்டி..

    கொரோனா வைரஸ் இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 140-க்கும் மேல் சென்றுவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    அப்போது தமிழகத்தின் பெரும்பாலான தொலைபேசி இணைப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்ட தமிழக அரசு அவர்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டால் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன் ஒலிபரப்ப கேட்டுக் கொண்டது.

    கொரோனா.. எல்லா பார்க்கையும் இழுத்து மூடுங்க.. திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு! கொரோனா.. எல்லா பார்க்கையும் இழுத்து மூடுங்க.. திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    அதன்படி முதலில் இருமல் சப்தம் வரும். பின்னர் கைகளை கழுவது, இருமல் தும்மல் வந்தால் கைகுட்டை கொண்டு முகத்தை மூடிக் கொண்டு செய்வது, நோய்வாய் பட்டவர்களுடன் பேசும் போது 1 மீட்டர் இடைவெளியில் பேசுவது உள்ளிட்டவை ஒலிபரப்பானது. இந்த நிலையில் இதற்கு போட்டியாக ரஜினி ரசிகர்களும் ஒரு காலர் ட்யூனை பரப்பி வருகிறார்கள்.

    அரசியல் மாற்றம்

    அரசியல் மாற்றம்

    அதில் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை என ரஜினியின் பேச்சு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான ரசிகர்களை தொடர்பு கொண்டாலே இந்த ட்யூன்தான் ஒலிக்கிறது. ரஜினி கூறும் அரசியல் மாற்றம், மக்கள் புரட்சி, எழுச்சி என்பதெல்லாம் இன்னும் ஓராண்டுகளில் சாத்தியமில்லை.

    பணத்துக்கு

    பணத்துக்கு

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கேற்ப மக்களாய் பார்த்து திருந்தி நல்லது கெட்டது அறிந்து ரஜினி கூறுவது போல் வாக்களித்தால்தான் உண்டு. அப்படியே ஒரு புரட்சி ஏற்படுத்தினாலும் நாளை வாக்குப் பதிவு என்றால் இன்று நள்ளிரவில் பிரதான கட்சிகள் கொடுக்கும் பணத்துக்குத்தான் பலர் விசுவாசமாக இருப்பர்.

    தேமுதிக

    தேமுதிக

    இன்னும் சிலர் தேமுதிக விஜயகாந்த் அறிவுரைக்கேற்ப பணத்தை பெற்று கொண்டு ஓட்டை ரஜினிக்கு போடலாம் என வீட்டை விட்டு கிளம்பும் போது முடிவு செய்திருப்பர். ஆனால் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்களை பார்த்தவுடன் ஏற்கெனவே போட்டு போட்டு பழகிய கைகள் அந்த சின்னங்களை நோக்கியே பரபரக்கும்.

    ஓட்டு

    ஓட்டு

    இந்த புரட்சியை 40 வயதிலேயே தன்னை பதவி தேடி வந்ததாக கூறும் ரஜினி செய்திருந்தால் இப்போதாவது 60 சதவீதம் நடந்திருக்கும். ஆனால் இட்ஸ் டூ லேட் என்பது போல் இன்னும் ஓராண்டுகளில் நடைபெறுவதற்கெல்லாம் சாத்தியமில்லை. மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டால் மட்டும் ஓட்டு போட்டுவிடுவார்களா என்ன?

    அரசியல் நிபுணர்கள்

    அரசியல் நிபுணர்கள்

    ஒவ்வொரு முறையும் மக்களின் எண்ணவோட்டம் மாறுப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எனவே கொரோனா காலர் ட்யூன் ஏதோ ஆங்கிலத்தில் வந்தாலும் ஏதோ புரிந்து கொண்டு மக்கள் விழிப்புணர்வாக இருப்பர். ஆனால் என்னதான் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு ரஜினியின் காலர் ட்யூனை பயன்படுத்தினாலும் அதனால் எந்த விழிப்புணர்வும், அரசியல் மாற்றமும் அதுவும் இன்னும் ஓராண்டுக்குள் நடைபெறாது என்பதே அரசியல் நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

    English summary
    Rajini fans uses his speech on Political change as caller tune.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X