இது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்!
கடந்த மாவட்ட செயலாளர் சந்திப்பின் போது தனக்கு மனவருத்தம் ஏற்பட்டது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதற்கான காரணத்தை தற்போது செய்தியாளர் சந்திப்பில் விளக்கி இருக்கிறார்.
சென்னை: கடந்த மாவட்ட செயலாளர் சந்திப்பின் போது தனக்கு மனவருத்தம் ஏற்பட்டது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதற்கான காரணத்தை தற்போது செய்தியாளர் சந்திப்பில் விளக்கி இருக்கிறார்.
Recommended Video
கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான விஷயங்களை பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு சின்ன ஏமாற்றம் இருக்கிறது. ஒரு மனவருத்தம் உள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய மனவருத்தம் என்ன என்று பின்னர் அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
பலரும் இந்த மன வருத்தம் என்ன என்று குழம்பிக் கொண்டு இருந்தனர். இது தொடர்பாக யூகங்களின் அடிப்படையில் நிறைய செய்திகள் வந்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்தே தன்னுடைய மன வருத்தம் என்ன என்று விளக்கி இருக்கிறார்.

என்ன பேச்சு
இன்று நடந்த மாவட்ட செயலாளர் சந்திப்பிற்கு பின் பேசிய ரஜினிகாந்த், 1996 ல் அரசியலுக்கு வருவதற்கு எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏற்கவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என 2017 டிசம்பருக்கு முன்பு நான் சொன்னதில்லை.1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் ஆசை இல்லை. எனக்கு இப்போதும் முதல்வர் ஆசை இல்லை.

பதவி வேண்டாம்
எனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறினேன். இது மக்களுக்கு தெரிந்த போது, அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டார்கள். சரி என்னுடைய திட்டத்தை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன். இதனால் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். மாவட்ட செயலாளர்களிடம் இதை பற்றிய பேசினேன். ஆனால் நான் முதல்வர் இல்லை என்பதை மாவட்ட செயலாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிர்ச்சி அடைந்தனர்
அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் அதிர்ச்சி எனக்கு வருத்தத்தை கொடுத்தது. என்னுடைய திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுதான் எனக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது. நான் மன வருத்தம் என்று சொன்னது இதைத்தான். என்னுடைய திட்டத்தை அவர்களை ஏற்காதது ஒரு வகையில் பெரிய மன வருத்தம்தான். நான் முதலமைச்சர் ஆகப்போவதில்லை என்பதை யாரும் தியாகம் செய்ததாக நினைக்கக் கூடாது.

நல்ல நபர்
இது ஒரு ராஜதந்திரம் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நபர் ஒருவரை முதல்வராக்க வேண்டும். நான் கட்சியை கவனித்துக் கொள்வேன். எனக்கு பதவி கொடுத்து அழகு பார்க்க நினைக்க வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டாம். வயது குறைவாக இருக்கும் இளைஞர் ஒருவரை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதுதான் என்னுடைய திட்டம். ஆனால் இதை மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை. இதுதான் எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

மக்கள் கேட்க வேண்டும்
தொண்டர் என்பர் தலைவர் சொல்வதை கேட்க வேண்டும். அசுர பலத்துடன் இருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை நாம் எதிர்க்கிறோம். ஆனால் அந்த கட்சியில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லை. பெரிய தலைவர்களும் இல்லை. இதுதான் வெற்றிடம். இதன் நாங்கள் நிரப்புவோம். அதை செய்தால் பெரிய கட்சிகளின் ஆள் பலம், சூழ்ச்சி எதுவும் இங்கு நிற்காது. அந்த அலை உருவாகும் என்று நம்புகிறேன்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications