வட்டிக்கு பணம் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ரஜினி!
நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் குறித்து அவர் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அவர் மீதான வருமான வரி ஏய்ப்பு புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய ரகசியங்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 வரை வாங்கிய வருமானத்திற்கு வரி கட்டவில்லை என்பதுதான் இங்கு புகார். இதற்காக அவருக்கு வருமானவரித்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி 2002 - 2003 நிதி ஆண்டில் ரஜினிகாந்த்திற்கு 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . அதை ரஜினி செலுத்தவில்லை. மேலும் 2003-04ம் ஆண்டில் 5 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும். மேலும் 2004-05ம் ஆண்டில் 54 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் செலுத்தி இருக்க வேண்டும்.

வழக்கு
ஆனால் ரஜினி இந்த அபராதம் எதையும் செலுத்தவில்லை. இதனால் வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் 2014ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்குதான் இத்தனை வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று முதல் நாள் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது வழக்கம் இல்லை. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுகிறோம்.

ரஜினி வாபஸ்
ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வாபஸ் வாங்கியது. இதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை சமர்ப்பணம் செய்தது. இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரித்துறையில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த ஆவணங்கள் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

ரஜினி ஆவணம்
ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனை தொழிலாக கொடுக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கினேன். இதற்கு ரூ. 1.45 லட்சம் வட்டி கிடைத்தது.

பல்வேறு காலம்
இதேபோல் பல்வேறு காலங்களில் நான் பலருக்கும் கடன் கொடுத்தேன். 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன். அதன்பின் பிர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தேன். இதில் எனக்கு பலர் கடனை திரும்ப தரவில்லை. இதனால் எனக்கு 33 லட்சம் ரூபாய் வரை இழப்பு தான் ஏற்பட்டது. இதை தொழிலாக செய்யவில்லை. நண்பர்களுக்கு உதவியாக செய்தேன். அதனால் இதற்கு வரி கட்ட தேவையில்லை என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications