மாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்!
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மையினர் அகதிகள் மத துன்புறுத்தலால் 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டுவதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டமே தேவையே இல்லை என்று கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

போராட்டம் வன்முறை
இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் தடியடி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் எரிப்பு, துப்பாக்கிச்சூடு போராட்டம் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் பல கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

போராட்டங்கள்
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தால் இந்திய சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு சொல்லியும் போராட்டம் ஓயவில்லை. மாறாக நாளுக்கு நாள் பல மாநிலங்களில் போராட்டம் அதிகரித்தே வருகிறது. குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது.
— Rajinikanth (@rajinikanth) December 19, 2019 |
ரஜினி கருத்து
இந்த போராட்டங்கள் குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி, "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றார்.

விமர்சனங்கள்
இதில் ரஜினியின் முதல் இரு வரிகளான எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது என்ற கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்ட விவகாரத்தில் வன்முறை மற்றும் கலவரம் செய்வது யார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எதிர்க்கிறீர்களா
அத்துடன் குடியுரிமை சட்டம் குறித்து ரஜினியின் நிலைப்பாடு என்ன என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா அல்லது நடுநிலை வகிக்கிறாரா என்று கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications