ரஜினி முதல் விஷால் வரை.. ஜனநாயக கடமையாற்றும் நடிகர், நடிகைகள்.. வாக்களிக்க போகும் இடங்கள், நேரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளனர். இதேபோல் திரையுலக நடிகர், நடிகைகளும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். ரஜினிகாந்த், விஷால், நடிகைகள் திரிஷா, குஷ்பு என திரைப்பிரபலங்கள் அனைவரும் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களிக்க உள்ள இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை பார்க்காலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மக்களும் காலையிலேயே வாக்களித்து வருகின்றனர். அவர்களோடு தமிழ் திரைப் பிரபலங்களும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளார்கள்.

Rajini to Vishal Where Actors Cast Their vote in Tamil Nadu assembly election 2026

திரை பிரபலங்கள் வாக்கு செலுத்தும் நேரம்

1. காலை 7 மணிக்கு அஜித்குமார் வாக்கு செலுத்தினார். முதல் ஆளாக வந்து அவர் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

இடம் : பாரதிதாசன் மாநகராட்சிப் பள்ளி, திருவான்மியூர் (ECR முதல் சிக்னல் அருகே)

2. நடிகர் ரஜினிகாந்த் காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள்

இடம் : ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

3. கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் காலை 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள்

இடம் : கமராஜர் சாலை நகராட்சி பள்ளி (எல்டம்ஸ் ரோடு), ஆழ்வார்பேட்டை

4. காலை 10 மணிக்கு நடிகர் கார்த்தி, சூர்யா, சிவகுமார், ஜோதிகா ஆகியோர் வாக்கு செலுத்துகின்றனர்

இடம் : இந்து பிரசார சபா, தி.நகர்

சரத்குமார், ராதிகா

5. காலை 10 மணி அளவில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்துகிறார்

இடம் : குட்ஷெப்பர்டு பள்ளி

6. விஷால் பிற்பகல் 3:30 முதல் 4:30 மணிக்குள்

இடம் : வேலம்மாள் பள்ளி, அண்ணா நகர் ரவுண்டான அருகே

7. கவுதம் கார்த்தி காலை 7 - 7.30 மணி

இடம் : ஸ்டெல்லா மேரிஸ்

8. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் காலை 10 மணி அளவில் வாக்கு பதிவு

இடம் : நெல்லை நாடார் பள்ளி, கொட்டிவாக்கம்

டி. ராஜேந்தர்

9. நடிகர் நாசர் மற்றும் கமீலா நாசர் 10 மணி அளவில் வாக்கு செலுத்துகிறனர்

இடம் : தேவி அகடமி பள்ளி, வளசரவாக்கம்

10. வைரமுத்து கலை 10 மணி வாக்கு பதிவு

இடம் : மாநகராட்சி நடுநிலை பள்ளி, 6 வது குறுக்குத் தெரு, புலியூர் மெயின் ரோடு, டிரஸ்ட்புரம்.

11. கருணாஸ் காலை 10 மணிக்கு வாக்கு பதிவு செய்கிறார்

இடம் : கரியப்பா பள்ளி, தசரதபுரம்

12. நடிகர் டி. ராஜேந்தர் காலை 10 மணி

இடம் : ஹிந்தி பிரச்சார சபா

13. நடிகர் சத்யராஜ் காலை 10 மணிக்கு வாக்கு பதிவு

இடம் : நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை

14. நடிகர் ஆர்.ஜே பாலாஜி காலை 10 மணிக்கு வாக்கு பதிவு செய்கிறார்

இடம் : நாடார் பிரைமரி பள்ளி, பெருமாள் கோவில் முதல் தெரு, கோட்டூர்புரம்

நடிகை திரிஷா

15. இசையமைப்பாளர் டி. இமான் 10 மணிக்கு வாக்கு பதிவு செய்கிறார்

இடம் : பாலலோக் பள்ளி, விருகம்பாக்கம்

16. நடிகை த்ரிஷா 11 மணி

இடம் : Saint Francis Xavier School, ஆழ்வார்பேட்டை ( அடையார் கேட் ஹோட்டல் அருகில் )

17. ஜி.வி பிரகாஷ்குமார் மதியம் 12 மணிக்கு வாக்கு பதிவு

இடம் : சாரதா வித்யாலயா, மாடல் மேல்நிலைப்பள்ளி, தி. நகர்

18. மதியம் 1 மணிக்கு நடிகர் வடிவேலு வாக்கு செலுத்துகிறார்

இடம் : காவேரி பள்ளி சாலிகராமம்

நடிகர் விஜய்

19. நடிகர் விஜய் காலை 10 மணியளவில் வாக்கு செலுத்துகிறார்

20. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் காலை10 மணிக்கு வாக்கு செலுத்துகிறார்

இடம் : கார்த்திகேயன் பள்ளி, ஏ.வி.எம் ஸ்டூடிவின் எதிர்புறம், வடபழனி

21. நடிகை சினேகா காலை 10 மணிக்கு வாக்கு செலுத்துகிறார்.

இடம் : பாண்டிபஜார் நகராட்சி பள்ளி, ஜி.ஆர்.டி ஹோட்டல் அருகில்

22. நடிகர் பிரசன்னா காலை 10 மணிக்கு வாக்கு செலுத்துகிறார்

இடம் : விருகம்பாக்கம் ஐநக்ஸ் திரையரங்கம் அருகில்

23. நடிகர் விஜய் சேதுபதி 10 மணிக்கு வாக்கு பதிவு செய்கிறார்

இடம் : மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, கீழ்ப்பாக்

24. குஷ்பூ மற்றும் சுந்தர்.சி காலை 6.45 - 7 மணி

இடம்: ஸ்ரீ ராஜலட்சுமி மேல்நிலைப் பள்ளி, 5th Trust Cross street, மந்தவெளிப்பாக்கம்

25. அருண் விஜய் மற்றும் விஜய் குமார் காலை 8 மணி

இடம் : கிருஷ்டியன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, வண்டிப்படை தெரு, ஈகட்டுத்தாங்கல்

26. பிரதீப் ரங்கநாதன் பிற்பகல் 10 மணி

இடம் : கிங்ஸ் பள்ளி, மடிப்பாக்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+