நான் படத்த சொன்னேன்.. நானும் படத்ததான் சொன்னேன்.. அடுத்தடுத்து கலகலப்பு
சென்னை: நான் படத்த சொன்னேன், நானும் படத்ததான் சொன்னேன் என அடுத்தடுத்து இரு நடிகர்களும் கலகலப்பாக பேசியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஒரு படத்தில் சொல்வதை போல் அரசியல் கட்சி கொடிகள் ஏராளமாகிவிட்டன. அதற்கேற்ப நடிகர்களும் அரசியலுக்கு வருவதாக கூறிவருகின்றனர். அதன்படி கமல் கட்சி தொடங்கிவிட்டார். ரஜினி தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
விஜய்யும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்களும் அவரது தந்தை எஸ்ஏசியும் விரும்புகின்றனர். அதுபோல் சிம்புவுக்கு அரசியலுக்கு தயாராகி வருவதாக டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
இதில் முக்கிய ஹைலைட்டே முதலில் அரசியலுக்கு வருவது ரஜினியா அல்லது விஜய்யா. இருவரும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை எடுத்து வைக்காவிட்டாலும் தங்களது பேச்சு திறனால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

விஜய் சொன்னார்
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், எல்லாரும் தேர்தல நின்னு சர்கார் அமைப்பாங்க. நாங்க சர்கார் அமைச்சுட்டு தேர்தல நிக்க போறோம் என்றபோது ரசிகர்கள் விசில் சப்தம் பறந்தது. இதையடுத்து நான் படத்த சொன்னேன் என்று விஜய் கூறினார்.

மகிழ்ச்சி
அதுபோல் ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டார். ஆனால் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என தெரியவில்லை. இந்நிலையில் அவர் இன்று வெளியான 2.0 டீசர் வெளியீட்டு விழாவில் பேசியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

லேட்டாக வந்தாலும்...
ரஜினி பேசுகையில் எல்லாரும் 2.0 ஏன் லேட்டு ஏன் லேட்டுனு கேக்கறாங்க. லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும், கரெக்ட்டா வந்தால் கரெக்ட்டா அடிக்கணும் என்று ரஜினி கூறியபோது ரசிகர்களின் விசில் சப்தம் சத்யம் தியேட்டரையே அதிர வைத்தது. பின்னர் நான் படத்தை சொன்னேன் என கூறினார்.

மகிழ்ச்சி
என்னதான் இருவரும் படத்தை கூறியதாக இருந்தாலும் அவர்களது பேச்சு அரசியலையே பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இது போல் அவரவர் விரும்பும் தலைவர்கள் இதுபோல் அரசியல் குறித்து பஞ்ச் பேசுவதை இருவரது ரசிகர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.
-
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’












Click it and Unblock the Notifications