அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் நிச்சயம் ஜெயிலுக்கு போவார்.. சுப்பிரமணியன் சுவாமி தடாலடி
Recommended Video

சென்னை: அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் நிச்சயம் ஜெயிலுக்குதான் போவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எப்போதும் எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்மறையாகவே இவர் பேசுவது வழக்கம்.
அந்த வகையில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சொந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்காமல் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். எதையாவது உளறிக் கொண்டே இருக்கும் இவர் மீது கட்சியும் எந்த நடவடிக்கையையும் எடுக்காது.

ஜெயிலுக்கு போவார்
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வர போகிறது. தற்போது இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை விடவில்லை. தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு இவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் ஜெயிலுக்கு போவார் என்றார்.

கொல்கத்தா
மேலும் தான் ஒரு பிராமணர் என்பதால் தன்னால் சவுக்கிதார் ஆக முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ‘ஆனுவல் கொல்கத்தா டயலாக் 2019' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி.

6-ஆவது இடம்
அப்போது அவர் கூறுகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

3-ஆவது இடம்
ஆனால், உண்மையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும், பிரதமர் மோடி தொடர்ந்து 6 வது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாங்கும் சக்தியை பொருத்தத்து தான் கணக்கிட வேண்டும். அந்நிய செலாவணி வைத்துக் கணக்கிடக் கூடாது. அந்நிய செலாவணி இருப்பு நிலைத்தன்மையற்றது என்றார் சுவாமி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications