சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை.. ஒருவழியாக ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் என்பது குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 30-ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

    காங்கிரஸ் அல்லாத கட்சிகளில் அதிக தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கட்சி என்ற பெரும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

    500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்... பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்... பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு

    ரஜினி பேட்டி

    ரஜினி பேட்டி

    சென்னையில் போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 303 தொகுதிகளில் பாஜக வென்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.

    அலை வீசியது

    அலை வீசியது

    அதற்கு ரஜினிகாந்த் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    தேசிய அளவில் மோடிக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் மோடிக்கு எதிராகவும் அலை வீசியது. ஹைட்ரோகார்பன், நீட் போன்ற திட்டங்களும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரமும் தமிழகத்தில் பாஜகவை தோல்வியடைய வைத்தன. நேரு, இந்திராவுக்கு பிறகு மோடி செல்வாக்கு பெற்றவராக திகழ்கிறார். கோதாவரி - காவிரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என்றார்.

    கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

    கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

    மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து மோடிக்கு ரஜினி காந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மக்களவை தேர்தலில் நீங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளீர்கள். எனது மனபூர்வமான வாழ்த்துகள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    RajiniKanth accepts Modi wave not works in Tamilnadu. He also says that this was the main reason for BJP's failure in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X