திடீர்னு ரஜினிக்கு போனை போட்ட "அந்த" விஐபி.. "ஹா..ஹா.." விழுந்து விழுந்து சிரித்து.. பூரித்த தருணம்
ரஜினிக்கு குமரி அனந்தன் போனில் வாழ்த்து சொன்னாராம்
சென்னை: ரஜினிகாந்த்துக்கு போன் போட்டு வாழ்த்து சொன்னாராம் அந்த முக்கிய நபர்.. இதனால் மனம் குளிர்ந்து போயுள்ளார் ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு சமீபத்துல, மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது தரப்பட்டது.. இந்த விருது தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சியே என்றாலும், தேர்தல் சமயத்தில், அதுவும் பிரச்சாரங்கள் முடிவுக்கு வரும் நேரத்தில் எதற்காக ரஜினிக்கு விருது தரப்பட்டது என்ற சூடான விவாதங்கள் அனலை கிளப்பின...!
அதேசமயம் ரஜினிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. அந்த வகையில், ஒரு பிரபலம் ரஜினிக்கு போன் போட்டு வாழ்த்தி உள்ளார்.. அவர்தான் தீவிர காங்கிரஸ்வாதியான மூத்த தலைவர் குமரி அனந்தன்... இவர்தான் ரஜினிக்கு போனில் வாழ்த்து சொன்னாராம்.

பின்னணி
குமரி அனந்தன் வாழ்த்தை கேட்டதும் ரஜினி பூரித்து போய் உள்ளார்.. இதற்கு ஒரு பின்னணி காரணமும் உள்ளது.. 96ம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று சொல்வதற்காக, அப்போதைய பிரதமர் நரசிம்மராவையும், ரஜினியையும் சந்திக்க ஏற்பாடு செய்ததே குமரி அனந்தன்தான்.. எனினும், ரஜினியின் பேச்சை மீறி, நரசிம்மராவ், அதிமுக - காங்கிரஸ் கூட்டணியை அமைத்துவிட்டார்..

குமரி அனந்தன்
இதனால்தான் தமிழக காங்கிரஸ் உடைந்து தமாகா தோன்றியது..இந்த விவகாரங்களை எல்லாம் குமரி அனந்தனும் - ரஜினியும் போனில் நினைவுகூர்ந்து பேசினார்களாம். இப்போது மட்டுமல்ல, ரஜினிக்கு எப்போது பிறந்த நாள் வந்தாலும் குமரி அனந்தன் வாழ்த்து சொல்வார்.. அப்போதெல்லாம் இதே நினைவுகளை இவர்கள் அசைபோடுவார்களாம்..

நரசிம்மராவ்
அதிலும் ரஜினிதான் அதிகமாக பேசுவாராம்.. '96-ல் டெல்லியில் என்னை மட்டும் பிரதமர் நரசிம்மராவ் உள்ளே கூப்பிட்டாரு... நான் போனதும் தெலுங்குலயே என்கிட்ட பேசினார் நரசிம்ம ராவ்... இவங்கள எல்லாம் நம்பியா இங்கே வந்திருக்கே?ன்னு என்னை கேட்டாரு. உடனே நான் டென்ஷனாகி அமெரிக்கா போயிட்டேன்... ஆனால், அப்பவே நரசிம்மராவ் நம்ம விஷயத்துக்கு கரெக்டா ஒத்துக்கிட்டிருந்தால், அப்பவே ஆட்சி மாறியிருக்கும்... நாமளே ஆட்சி அமைச்சிருப்போம்... என்று பலமுறை குமரிஅனந்தனிடம் ரஜினியே நினைவுகூர்ந்து பேசியதும் உண்டு..

வாழ்த்து
அதுபோலதான், இப்போதும் போனில் குமரி அனந்தனும், ரஜினியும் 25 வருட பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொண்டதாகவும், அனைத்தையும் கேட்டுவிட்டு ரஜினி தன் பாணியிலேயே சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால், "பாஜகவின் பிடியில் ரஜினி இருக்கிறார், பாஜகவின் பிம்பம்" என்று ரஜினி மீது எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும், 25 வருடங்களாக காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கத்தையும், நட்பையும் ரஜினி பேணி வருவது குறிப்பிடத்தக்கது..

ஆசீர்வாதம்
சென்ற வருடம் நடந்த ஒரு விழாவிலும் குமரி அனந்தன் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கியதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. பாஜகவின் சாயல் என்று சொல்லப்பட்டு வரும் ரஜினி, காங்கிரஸ் ஆட்சி அமைக்க அன்றே ஒத்துழைக்க தயாராக இருந்திருக்கிறார்.. ஆனால் காங்கிரஸ்தான், அப்போது ரஜினியை பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..!












Click it and Unblock the Notifications