மோடிக்கு ரஜினிகாந்த் கொடுத்த “ஐடியா”.. இன்று நாடே இது பத்திதான் பேசுது! டெல்லி சென்றது இதற்காகவா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசிய கொடியேற்ற நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இதில் நடிகர் ரஜினியின் பங்கு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது.
கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மான் கி பாத்
இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மான் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

75 வது சுதந்திர தினம்
அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நாம் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
Recommended Video

வீடுதோறும் தேசியக்கொடி
ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.

ரஜினியின் டெல்லி பயணம்
இந்த நிலையில், 75 வது சுதந்திர தின விழா தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். அங்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகின. ரஜினிகாந்த் இந்த குழுவில் இடம்பெற என்ன காரணம் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.

ரஜினியின் பங்கு
இதற்கான விடையை மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஒருமுறை ரஜினி பிரதமர் மோடியிடம் பேசியபோது, எங்குபார்த்தாலும் பல கட்சிக் கொடிகளை பார்க்க முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேசியக்கொடி இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இதைதான் தற்போது பல காலம் கழித்து செயல்படுத்தி இருக்கிறார்கள்." என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications