சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்!

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட கலைஞர்கள் மீதான தேசதுரோக வழக்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கருத்து கூறாமல் அமைத்து காத்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி

    சென்னை: இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட கலைஞர்கள் மீதான தேசதுரோக வழக்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

    கடந்த ஜூலை மாதம் அனுராக் கஷ்யப், மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் நடக்கும் குழு வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்து இந்த கடிதத்தை எழுதி இருந்தனர்.

    இந்தியாவில் மத ரீதியாக நிறைய வன்முறை நடக்கிறது. நிறைய அத்துமீறல்கள், கொலைகள் அதிகரித்துள்ளது. சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

    என்ன சர்ச்சை

    என்ன சர்ச்சை

    இந்த கடிதம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் மணிரத்னம் இதை கையெழுத்திட்டதும் பெரிய வைரலானது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா இந்த 49 பிரபலங்களுக்கும் எதிராக வழக்கு தொடுத்தார். இதையடுத்து பீகாரில் இந்த 49 பேருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட்டு எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

    குரல் கொடுத்தனர்

    குரல் கொடுத்தனர்

    இதற்கு எதிராக பிரபலங்கள் பலர் தற்போது குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பாக இன்று டிவிட் செய்தார். இந்த விஷயத்தில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உடனடியாக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டிவிட் செய்து இருந்தார்.

    ரஜினி இல்லை

    ரஜினி இல்லை

    கமல்ஹாசன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் இன்னும் நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. பொதுவாக பாஜகவின் திட்டங்களுக்கு ஆதரவாக ரஜினி பேசுவார். ஆனால் இது தொடர்பாக ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அதிலும் 49 பேரில் பெரும்பாலான நபர்கள் திரையுலகை சேர்ந்தவர்கள். அதில் பலர் ரஜினியுடன் சேர்ந்து படம் நடித்து, எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்காக கூட இன்னும் ரஜினி கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். இந்த பிரச்சனை காரணமாக பலர் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    பாஜகவிற்கு எதிராக கருத்து கூறாமல் தவிர்த்து வரும் ரஜினி. தற்போது இந்த பிரச்சனைக்கும் கருத்து கூறவில்லை. இது திரையுலகில் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த அமைதி குறித்து பலர் டிவிட்டரில் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

    English summary
    Actor Rajinikanth keeps mum on the case against Maniratnam and 48 others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X