சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!
சென்னை: சென்ற வாரம் ஆதவ் அர்ஜுனா, மரியாதை குறைவாக பேசிவிட்டார் என ரஜினிக்கு ஆதரவாகத் திரண்டு பேசிய ஒட்டுமொத்த நெட்டிசன்களும் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். துரந்தர் 2 படத்தை ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தமிழக வெற்றி கழகத்தை சுற்றி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் ஏதாவது பேசிவிட்டால் அதை வைத்து அவர்களை அடியோ அடி என்று அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அப்படி கடந்த வாரம் சிக்கியவர் தான் ஆதவ் அர்ஜுனா. தமிழக வெற்றிக்கழக நிகழ்ச்சியில் பேசிய அவர் அரசியலுக்கு வர பயந்தவர் ரஜினி எனவும், திமுக அவரை மிரட்டியதாகவும் பேசி இருந்தார்.

இதை அடுத்து ஒட்டுமொத்த திமுகவினரும் ஆதவ் அர்ஜுனாவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் இத்தனை நாள் சைலன்ட் மோடில் இருந்த ரஜினி ரசிகர்கள் திடீரென விழித்துக் கொண்டு விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசினர். 2026 சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக பாஜக, அதிமுக தலைவர்கள் கூட தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனாவை மிக கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினியை பாராட்டிய நெட்டிசன்கள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் துரந்தர் 2 படத்தை ரஜினிகாந்த் பாராட்டியதுதான். ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்திருந்த இந்த படத்தின் முதல் பாகம் இந்தி மொழியில் மட்டும் வெளியாகி 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் தற்போது வரை 850 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் விரைவில் இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என சொல்லப்படுகிறது .இந்த நிலையில் இந்த படத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவர் வெளியிட்டுள்ள பதிவில்," என்ன மாதிரியான ஒரு படம் துரந்தர். ஆதித்யத் தார் மற்றும் ரன்விங் சிங் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஜெய்ஹிந்த்!" என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரஜினிகாந்த் பாராட்டுவதாக? என அவருக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர் நெட்டிசன்கள். மேலும் கடந்த காலங்களில் ரஜினிகாந்தின் பேச்சுகளை வைத்து அவரை சங்கி என விமர்சித்திருக்கின்றனர்.
இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த @narendramodi யின் #Demonetisation எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய #சங்கி @rajinikanth அவர்கள் இந்தப்படத்தை பாரட்டுவது ஒன்றும் அதிசயமில்லை.. #Dhurandhar2 https://t.co/KjjywnOEbp
— leninbharathi (@leninbharathi1) March 23, 2026
அந்த வகையில் பிரபல இயக்குனரான லெனின் பாரதி ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த மோடியின் #Demonetisation எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய #சங்கி ரஜினிகாந்த் அவர்கள் இந்தப்படத்தை பாராட்டுவது ஒன்றும் அதிசயமில்லை.. " என கூறியுள்ளார்.
-
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரஜினிக்கு வந்த சோதனை.. தலைவர் 173ல் சுந்தர் சி- யை போல வெளியேறிய சிபி.. இனி புது இயக்குனர் இவரா? -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்











Click it and Unblock the Notifications